AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Viral Video : மெலோடி சாக்லேட்டை இத்தாலி பிரதமருக்கு பரிசாக வழங்கிய பிரதமர் மோடி.. வைரல் வீடியோ!

PM Modi Gift To Italy PM Meloni | இந்திய பிரதமர் நரேந்திர மோடி 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன் ஒரு பகுதியாக அவர் இத்தாலி சென்றுள்ளார். அங்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு அவர் பரிசு வழங்கிய வீடியோ இணையத்தில் வைரல்.

Viral Video : மெலோடி சாக்லேட்டை இத்தாலி பிரதமருக்கு பரிசாக வழங்கிய பிரதமர் மோடி.. வைரல் வீடியோ!
இணையத்தில் வைரலாகும் பிரதமர் மோடியின் வீடியோ
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 20 May 2026 17:39 PM IST

ஸ்மார்ட்போன்கள் மற்றும் சமூக ஊடகங்களின் உதவியால் இணையத்தில் நாள்தோறும் ஏராளமான வீடியோக்கள் வெளியாகி வைரலாகும். அந்த வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி (Indian Prime Minister Narendra Modi), இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனிக்கு (Italy Prime Minister Giorgia Meloni) வழங்கிய பரிசு தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில், இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் அந்த வீடியோ குறித்து விரிவாக பார்க்கலாம்.

இத்தாலி பிரதமர் மெலோனிக்கு பரிசு வழங்கிய பிரதமர் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 5 உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயண திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் இத்தாலி நாட்டுக்கு சென்றடைந்தார். அங்கு சென்ற அவருக்கு இந்தியர்களிடல் இருந்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி தனது பயணங்கள் குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், அவர் இத்தாலி பிரதமர் மெலோனிக்கு வழங்கிய பரிசு தொடர்பான வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

இதையும் படிங்க : Viral Video : பச்சை ரசாயனம் பூசப்பட்ட வெள்ளரிக்காய்.. இணையத்தில் வைரலாகு அதிர்ச்சி வீடியோ!

இணையத்தில் வைரலாகும் வீடியோ

 

View this post on Instagram

 

A post shared by Giorgia Meloni (@giorgiameloni)

இணையத்தில் வைரலாகி வரும் அந்த வீடியோவில் இத்தாலி பிரதமர் மெலோனி, பிரதமர் நரேந்திர மோடி எங்களுக்காக பரிசு வாங்கி வந்துள்ளார் என்று கூறுகிறார். உடனே பிரதமர் மோடி மெலோடி (Melody) சாக்லேட் பாக்கெட்டை கேமராவில் காட்டுகிறார். இவை அனைத்தும் அந்த வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. இதனை தனது இன்ஸ்டாகிராம் பகத்தில் பதிவிட்டுள்ள இத்தாலி பிரதமர் மெலோனி, பரிசுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க : Viral Video : கத்தி குத்தில் இருந்து பெண்ணை காப்பாற்றிய இளைஞர்கள்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ!

பிரதமர் மோடி மற்றும் இத்தாலி பிரதமர் மெலோனியின் நட்பை குறிக்கும் விதமாக மெலோடி என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. இந்த நிலையில் தான், மெலோடி என்ற சாக்லேட்டை பிரதமர் மோடி இத்தாலி பிரதமருக்கு பரிசாக வழங்கியுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் பேசுபொருளாக உள்ளது.

Follow Us