சிறந்த 5 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் – உங்க சாய்ஸ் எது?
Best Android Smartphones: இப்பொழுது சந்தைகளில் கூட செயல்திறன், தரம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை இந்த பதிவில் பார்க்கலாம். இவை கேமரா, கேமிங் போன்ற பல காரணிகளை அடிப்படையாகக் கொண்டு சிறந்த ஸ்மார்ட்போன்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் நிர்ணயித்த விலை , செயல்திறன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தேர்ந்தெடுக்கலாம்.

ஆண்ட்ராய்டு (Android) போன்கள் இன்று மிகவும் வசதியானதாக மாறியிருக்கிறது. மேலும் பொதுமக்களுக்கு நிகரற்ற நன்மைகளை வழங்குகின்றன. விருப்பத்திற்கு ஏற்ப பல மாடல்கள், விலைக்கு ஏற்ற தரங்களில் கிடைப்பது அதன் சிறப்பாக கருதப்படுகிறது. கேமராக்கள், அதிக பவர் கொண்ட பேட்டரி, வசதியான கஸ்டமைசேஷன், தன்னிச்சையான அப்ளிக்கேஷன் தேர்வுகள் போன்றவை ஆண்ட்ராய்டின் நன்மைகளாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஐபோனுடன் (IPhone) ஒப்பிட்டால், ஆண்ட்ராய்டு அதிக விருப்பங்களையும், இலகுவான பயன்பாட்டையும் மக்களுக்கு அளிக்கிறது. ஆனால் ஐபோன் பாதுகாப்பு மற்றும் நீடித்த செயல்திறனில் முன்னிலையில் உள்ளது. ஆண்ட்ராய்டு போன்கள் விலைக்கு ஏற்ப அனைத்து விதமான தரங்களிலும் கிடைப்பதால், மக்கள் மத்தியில் அதிக விருப்பம் பெற்றவை.
சந்தையில் கிடைக்கக்கூடிய சிறந்த ஆண்ட்ராய்டு போன்களை அவை நவீன தொழில்நுட்ப வசதிகளை, உயர் தர கேமரா திறன், நீண்ட பேட்டரி ஆயுள், மற்றும் சிறப்பான செயல்திறனை வைத்து மதிப்பிடலாம். சாம்சங், ஒன்பிளஸ், கூகுள் பிளஸ், ஜியோமி போன்ற பிராண்டுகள் வழங்கும் ஹை எண்ட் மற்றும் பட்ஜெட் மாடல்கள் பயனர்களின் தேவையை பூர்த்தி செய்கின்றன. நீங்கள் சிறந்த கேமரா, கேமிங் அனுபவம் அல்லது தினசரி பயன்பாட்டுக்கு ஒரு நல்ல போன் தேடினால், தற்போதைய ஆண்ட்ராய்டு போன்களில் உங்களுக்கு ஏற்ற தேர்வுகள் நிறைய உள்ளன. டெக் அட்வைசர் தளத்தின் அடிப்படையில் சிறந்த ஸ்மார்ட்போன்களை பார்க்கலாம்.
1. சாம்சங் கேலக்ஸி எஸ்24 அல்ட்ரா (Samsung Galaxy S24 Ultra)
இது தற்போது உள்ள ஆண்ட்ராய்டு போன்களில் மிகவும் ப்ரீமியம் வகையைச் சேர்ந்தது. இதில் 200 மெகாபிக்சல் கேமரா, பிரமாண்டமான AMOLED டிஸ்ப்ளே மற்றும் S Pen வசதி போன்றவை இந்த மாடலை சிறந்ததாக கருதப்படுகிறது. சக்திவாய்ந்த Snapdragon 8 Gen 3 செயலி மற்றும் நீண்டநாள் பேட்டரி ஆகியவற்றிற்கான இது அன்றாட பயன்பாடுகள் மற்றும் கிரியேட்டிவ் வொர்க்கிற்கு சிறந்த தேர்வாக இருக்கிறது. இதன் ஆரம்ப விலை சுமார் ரூ.1,29,999 ஆகும்.
2. கூகுள் பிக்சல் 8 ப்ரோ (Google Pixel 8 Pro)
இது கூகுள் கம்பெனியின் சொந்த ஸ்மார்ட்போன் என்பதால், ஸ்டாக் ஆண்ட்ராய்டு அனுபவம் மற்றும் 7 ஆண்டு அப்டேட் பெறும் வாக்குறுதியுடன் கிடைக்கிறது. கேமரா குவாலிட்டி மிகவும் நம்பிக்கையுடன் இருப்பது மட்டுமல்லாமல், AI அடிப்படையிலான டூல்களால் நவீன பயனர்களுக்கு இது மிகவும் பிடித்ததாக இருக்கிறது. இதன் விலை சுமார் ரூ. 1,06,999.
3. ஒன்பிளஸ் 12 (OnePlus 12)
இது விலைக்கேற்ற உயர் செயல்திறன் கொண்ட போனாகும். Snapdragon 8 Gen 3 செயலி, 100W அதிவேக சார்ஜிங் வசதி மற்றும் ஃப்லூயிட் AMOLED டிஸ்ப்ளே ஆகியவை இதில் முக்கிய அம்சங்கள். இந்த போன் ரூ.64,999 விலைக்குள் கிடைக்கிறது. இது ஒரு பஜெட் ப்ரோ-போனாக பாராட்டப்படுகிறது.
4. சாம்சங் கேலக்ஸி இசட் ஃபோல்ட்5 (Samsung Galaxy Z Fold5)
இது மடிக்கக்கூடிய வகை போன்களில் முதலிடம் வகிக்கிறது. இது ஸ்மார்ட்போனும் டேப்லெட்டும் ஒன்றாக செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ரீமியம் யூசர்களுக்கும் தொழில் செய்யும் நபர்களுக்கு ஏற்றவாறு, S Pen வசதியுடன் வருகிறது. இதன் விலை ரூ.1,54,999 முதல் கிடைக்கிறது.
5. நத்திங் போன் 2 (Nothing Phone 2)
இது மடிக்கக்கூடிய போன்களில் முதலிடம் வகிக்கிறது. இது ஸ்மார்ட்போனும் டேப்லட்டும் ஒன்றாக செயல்படக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ரீமியம் யூசர்களுக்கும் பிசினஸ் வொர்க் செய்யும் நபர்களுக்கும் ஏற்றவாறு, S Pen வசதியுடன் வருகிறது. இதன் விலை ₹1,54,999 முதல் ஆரம்பமாகிறது.