சீனாவின் ஒரு மலைப்பாதையில் உயிருக்கு ஆபத்தான ஒரு தருணம் கேமராவில் பதிவான நிலையில், அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு சுற்றுலாப் பயணி 15 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில், செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது, அவரது காலின் கீழ் இருந்த கல், திடீரென இடிந்து விழுந்ததன் காரணமாக அவர் பள்ளத்தாக்கில் விழுந்தார். இந்த சம்பவம் ஹுவாயிங் மலை பகுதியில் நடந்தது. வைரலான வீடியோவில், அந்த நபர் மலையின் நுனியில் நின்று, செல்ஃபி எடுக்க முயன்றபோது, அவரது காலில் கீழே இருந்த கல் உடைந்து விழுந்ததில், அவர் பள்ளத்தாக்கில் விழுந்தார்.