சமையலறையில் தொடங்கிய ஒரு வாதம், குஜராத் மாநிலத்து தம்பதிகளின் 23 ஆண்டுகள் நீண்ட திருமண வாழ்வை முடிவுக்கு கொண்டு வந்தது. மனைவியின் வெங்காயம் மற்றும் பூண்டு தவிர்க்கும் உணவுப் பழக்கமே பெரிய குடும்ப கலகமாகவும் இறுதியில் விவாகரமாகவும் மாறியுள்ளது. 2002ஆம் ஆண்டில் இருவரும் திருமணம் செய்துகொண்டனர். ஸ்வாமிநாராயண பிரிவைச் சேர்ந்த மனைவி, அந்த மரபின்படி வெங்காயமும் பூண்டும் சாப்பிடுவதே இல்லை. குடும்பத்தில் உள்ளவர்களுக்கு இந்தச் சேர்மானங்களுடன் உணவு சமைத்தாலும், மனைவிக்காக கணவனின் தாய் தனியாகவே வேறு உணவை சமைத்து வழங்கி வந்தார்.