YouTube பார்த்து இளம்பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்து, மரணத்திற்கு காரணமான சம்பவத்தில் ஒரு போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்தின் பராபங்கியில் இந்தச் சம்பவத்தில் 25 வயதுடைய இளம்பெண் உயிரிழந்தார். கடுமையான வயிற்றுவலியென சிகிச்சைக்காக அருகிலிருந்த ஒரு கிளிக்கிற்கு பரிசோதனைக்காக சென்றுள்ளார் அந்த பெண். ஆனால் அங்கே இருந்த போலி மருத்துவர், பெண்ணுக்கு பித்தப்பையில் கல் உள்ளதாக கூறி உடனே அறுவை சிகிச்சை செய்தார்.