பொதுவாக ரயில்களின் வெளிப்புறத்தில் மஞ்சள், வெள்ளை கோடுகளை பார்த்திருப்போம். ஆனால் அதன் அர்த்தம் பற்றி பலருக்கும் தெரியாது. இந்திய ரயில்வே, உலகின் மிகப்பெரிய ரயில்வேகளில் ஒன்று. பயணிகளுக்கு ரயில்வே அளிக்கும் வசதிகள், பாதுகாப்பு, தகவல்கள் அனைத்தும், ரயிலில் சில குறியீடுகளாக குறிப்பிடப்பட்டிருக்கும். அது ரயில் பயணிகளுக்கு சில நேரம் குழப்பத்தை ஏற்படுத்தும். பழைய ஐசிஎஃப் பெட்டிகள் உலோகத்தால் உருவாக்கப்படும் என்பதால், அதன் ஆயுட்காலம் 25 ஆண்டுகளாகும். அதன் பிறகு அது பயன்படுத்தப்படாது. அதே போல சிவப்பு நிறத்தில் கோடுகள் இருந்தால், அது எல்எச்பி பெட்டிகள்.