AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களும்.. திமுகவின் தேர்தல் சறுக்கல்களும்.. முழு விவரம்

கடுமையான சரிவுகளுக்கு மத்தியிலும், டெல்டா மற்றும் தென்மாவட்டங்கள் திமுகவிற்கு ஓரளவிற்குத் தார்மீகப் பலத்தை அளித்துள்ளன. டெல்டா மாவட்டங்களில் கே.என்.நேருவிற்கு ஒதுக்கப்பட்ட 37 தொகுதிகளில் 19 இடங்களிலும், தென்மாவட்டங்களில் கனிமொழிக்கு ஒதுக்கப்பட்ட 22 தொகுதிகளில் 13 இடங்களிலும் திமுக வெற்றிபெற்றுத் தனது பிடியை ஓரளவிற்குத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட மண்டலங்களும்.. திமுகவின் தேர்தல் சறுக்கல்களும்.. முழு விவரம்
மு.க.ஸ்டாலின், திமுக மூத்த தலைவர்கள்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 17 May 2026 09:40 AM IST

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக எதிர்பாராத கடுமையான பின்னடைவைச் சந்தித்தது. இந்தத் தேர்தல் தோல்வி குறித்து விரிவான ஆய்வு மற்றும் பகுப்பாய்வு செய்ய திமுக தலைமை தற்போது ஒரு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. தேர்தலுக்கு முன்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினால் நியமிக்கப்பட்ட தேர்தல் வியூகங்களுக்குப் பெயர் பெற்ற முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் களத்தில் எவ்வாறு சறுக்கல்களைச் சந்தித்தனர் என்பது குறித்த மண்டல வாரியான அதிர்ச்சித் தரவுகள் வெளியாகியுள்ளன. திமுகவின் பாரம்பரிய மற்றும் அண்மைக்கால தேர்தல் வியூக வகுப்பாளர்களாக அறியப்பட்ட மூத்த தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களிலேயே கட்சி மிக மோசமான படுதோல்வியைச் சந்தித்துள்ளது. சில மண்டலங்களில் திமுக ஒரு தொகுதியைக்கூடக் கைப்பற்ற முடியாமல் முழுமையாகத் துடைத்தெறியப்பட்டுள்ளது அக்கட்சியின் தலைமைக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: வெள்ளைத் துணி கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த முதல்வர் விஜய்.. தலைமைச் செயலகத்தில் புதிய மாற்றம்!

மேற்கு மண்டலம்:

தேர்தல் வியூகங்களின் மையப்புள்ளியாகப் பார்க்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஒதுக்கப்பட்ட 29 தொகுதிகளில் திமுக வெறும் 7 இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. குறிப்பாக கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்கள் திமுகவிற்குப் பெரும் பலத்த அடியைக் கொடுத்துள்ளன. ஈரோட்டின் 8 தொகுதிகளிலும், திருப்பூரின் 4 தொகுதிகளிலும் திமுக ஒரு இடத்தில் கூட வெல்ல முடியாமல் முழுமையாகத் தோல்வியடைந்துள்ளது.

வட மற்றும் உள் மாவட்டங்கள்:

அதிகப்படியான 41 தொகுதிகளைக் கவனித்து வந்த முன்னாள் அமைச்சர் ஏ.வ. வேலுவின் பொறுப்பில் திமுக வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. குறிப்பாக சேலம், தர்மபுரி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களின் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. அதேபோல, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசாவிற்கு ஒதுக்கப்பட்ட 33 தொகுதிகளில் வெறும் 2 இடங்களில் மட்டுமே திமுக வென்றிருப்பது அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ள வரலாற்றுச் சரிவைக் காட்டுகிறது .

பிடியைத் தக்கவைத்த டெல்டாவும், தெற்கும்:

கடுமையான சரிவுகளுக்கு மத்தியிலும், டெல்டா மற்றும் தென்மாவட்டங்கள் திமுகவிற்கு ஓரளவிற்குத் தார்மீகப் பலத்தை அளித்துள்ளன. டெல்டா மாவட்டங்களில் கே.என்.நேருவிற்கு ஒதுக்கப்பட்ட 37 தொகுதிகளில் 19 இடங்களிலும், தென்மாவட்டங்களில் கனிமொழிக்கு ஒதுக்கப்பட்ட 22 தொகுதிகளில் 13 இடங்களிலும் திமுக வெற்றிபெற்றுத் தனது பிடியை ஓரளவிற்குத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

மேலும் படிக்க: தவெக அமைச்சரவையில் விசிக எண்ட்ரி?.. எதிர்பாராத திருப்பம்?.. சஸ்பென்ஸ் வைக்கும் தலைமை!

ஓரளவிற்கு வெற்றியை தந்த இதர தொகுதிகள்:

இவை தவிர தங்கம் தென்னரசுவின் 29 தொகுதிகளில் 10 இடங்களும், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் 20 தொகுதிகளில் 8 இடங்களும், முன்னாள் அமைச்சர் சக்கரபாணிக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளில் 4 இடங்களும் மட்டுமே திமுகவிற்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விவரங்கள் திமுகவின் அடிமட்ட வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சரிவையும், கட்சியின் மூத்த தலைவர்கள் மீதான மக்கள் செல்வாக்கின் மாற்றங்களையும் உணர்த்துகிறது.

Follow Us