விருதுநகர் கொடூர வெடி விபத்து சம்பவம்.. வனஜா பட்டாசு ஆலை உரிமையாளர் கைது.. தனிப்படை செய்த சம்பவம்!

Virudhunagar Cracker Factory Accident : விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவத்தில் தலைமறைவாக இருந்து வந்த ஆலையின் உரிமையாளரை தனிப்படை போலீசார் வலை வீசி கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் தற்போது வரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விருதுநகர் கொடூர வெடி விபத்து சம்பவம்.. வனஜா பட்டாசு ஆலை உரிமையாளர் கைது.. தனிப்படை செய்த சம்பவம்!

வனஜா பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

Published: 

27 Apr 2026 11:29 AM

 IST

விருதுநகர் மாவட்டம், கட்டினார்பட்டியில் வனஜா என்ற தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வந்தது. இங்கு, அந்த பகுதிகளை சேர்ந்த சுமார் 30 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 19- ஆம் தேதி பட்டாசு ஆலைகள் வெடி பொருட்களில் ஏற்பட்ட உராய்வு காரணமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், சுமார் 25 பட்டாசு தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவம் தமிழகத்தையை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. இந்தச் சம்பவம் நடைபெற்ற சில நாட்களுக்கு முன்பு விருதுநகரில் மற்றொரு பட்டாசு தொழிற்சாலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் 4 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த இரு சம்பவங்கள் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டது.

தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

மேலும், வெடி விபத்து உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தமிழக தலைமைச் செயலாளர் சாய் குமார் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்த நிலையில், மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா உத்தரவின் பேரில், 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பட்டாசு ஆலையின் உரிமையாளரும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ஈஸ்வரி உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதில், பட்டாசு ஆலை உரிமையாளரின் கணவர் முத்துமாணிக்கம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

மேலும் படிக்க: துடைக்கப்படாத கண்ணீர்.. துரத்தும் சட்ட நடவடிக்கை.. விருதுநகர் பட்டாசு ஆலை விபத்தில் NHRC அதிரடி!

வனஜா பட்டாசு ஆலை உரிமையாளர் கைது

மேலும், அவருக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் மற்றும் பட்டாசு ஆலையின் உள்குத்தகைதாரர் முத்துராஜ் மற்றும் வைரமுத்து ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், தலைமறைவாக இருந்து வந்த பட்டாசு ஆலையின் உரிமையாளர் ஈஸ்வரியை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உறவினர் வீட்டில் தங்கி இருந்த ஈஸ்வரியை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவத்தை தொடர்ந்து, பட்டாசு தொழிலுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பட்டாசு ஆலைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

அதன்படி, காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணத்தால், இந்த இடைப்பட்ட நேரத்தில் பட்டாசுகளுக்கு மருந்து வைப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது. விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து சம்பவம் நிகழ்ந்த போது, முதலில் 3 உயிரிழப்புகள் மட்டுமே பதிவாகி இருந்தது. காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். மீட்பு பணிகள் தொடர்ந்து, நடைபெற்று வந்த நிலையில், அடுத்தடுத்து கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் இறுதியாக 25 தொழிலாளர்கள் பலியாகி இருந்தது தெரிய வந்தது.

மேலும் படிக்க: வெயிலின் தாக்கம்: பட்டாசு ஆலைகளுக்கு மத்திய அரசு விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகள்

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?