AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய்க்கு அழைப்பு, ஆனால் கூட்டணி இல்லை – பாஜக திட்டம் என்ன?

Tamil Nadu 2026 Elections: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் சூடுபிடித்துள்ளது. திமுக 200 தொகுதிகளில் வெற்றி பெறும் இலக்கை நிர்ணயித்துள்ளது. பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை இணைத்து திமுகவை எதிர்க்க திட்டமிட்டுள்ளது. விஜய்க்கு பாஜக அழைப்பு விடுத்தும் அவர் நிராகரித்துள்ளார். எதிர்க்கட்சிகள் திமுக ஆட்சியை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

விஜய்க்கு அழைப்பு, ஆனால் கூட்டணி இல்லை – பாஜக திட்டம் என்ன?
விஜய் -பாஜக அழைப்பை நிராகரித்தது ஏன்Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 01 Jun 2025 07:05 AM IST

சென்னை ஜூன் 01: தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திராவிட முன்னேற்ற கழகம் 200 தொகுதிகளைக் குறிவைத்து பணிகளை தொடங்கியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் -பாரதிய ஜனதா கட்சி கூட்டணி, பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் தேமுதிகவையும் இணைத்துக்கொள்ள முயல்கின்றது. திமுகவை தோற்கடிக்க அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய பாஜக திட்டமிட்டுள்ளது. சீமான் தனித்துப் போட்டியிட முடிவு செய்து வேட்பாளர்களை அறிவித்துள்ளார். விஜய்க்கு பாஜக அழைப்பு விட்டாலும் அவர் நிராகரித்தார். திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து செயலாற்றி வருகின்றன. பாமக மற்றும் தேமுதிகவை கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன.

தமிழக அரசியல் சூடு பிடிக்கும் தேர்தல் சூழல்

தமிழகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், முக்கியமான அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன.

200 தொகுதிகளிலும் வெற்றிக்கே நோக்கம்: திமுக முன்னிலை

திமுக, 200 தொகுதிகளை இலக்காகக் கொண்டு தற்போது தேர்தல் வேலைகளை ஆரம்பித்து விட்டது. திமுக கூட்டணியில் தற்போதுள்ள கட்சிகளே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதே திமுகவின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

திமுக ஆட்சியை அகற்றும் முயற்சியில் எதிர்க்கட்சிகள்

இதேவேளை, திமுக ஆட்சியை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் அதிமுக மற்றும் பாஜக இணைந்து செயலாற்றி வருகின்றன. பாமக மற்றும் தேமுதிகவை கூட்டணியில் இணைத்துக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்று வருகின்றன.

மேலும், திமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் ஒரு ஓரணியில் திரளவேண்டும் என்ற நோக்கில் பாஜக, நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் மற்றும் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தையும் நேரடியாக அணுகியுள்ளது.

சீமான் திட்டவட்டம் – தனித்து போட்டியிடும் நிலைமை தொடரும்!

எப்போதும் போலவே தனித்துப் போட்டியிடும் முடிவில் உறுதியுடன் இருப்பதோடு, சீமான் தற்போதையே பல தொகுதிகளில் வேட்பாளர்களை அறிவித்து தீவிர தேர்தல் வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அதே நேரத்தில் பாஜக, திமுகவுக்கு மாற்றாக அனைத்து கட்சிகளையும் இணைத்து ஒரு கூட்டணியை அமைக்கும் முயற்சியில் உள்ளது. தவெக தலைமையே கூட்டணிக்கு இருப்பதாகவும் பாஜக வலியுறுத்துகிறது.

விஜய் -பாஜக அழைப்பை நிராகரித்தது ஏன்?

பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விஜய்க்கு நேரடியாக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தும் அது எதிர்வினையின்றியே முடிந்தது. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய நாகேந்திரன், “மக்கள் விரோதமாக செயல்படும் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். தமது எண்ணங்களை யார் எப்படி வைத்திருப்பதாக இருந்தாலும் பரவாயில்லை. நாங்கள் திமுக ஆட்சியை தோற்கடிக்க முழு முயற்சியுடன் செயலாற்ற தயாராக இருக்கிறோம்” என்றார்.

“திமுக மீது அனைவருக்கும் அதிருப்தி” – நாகேந்திரன்

தொடர்ந்து, “திமுக கூட்டணியைத் தவிர மற்ற அனைத்து கட்சிகளும் தற்போதைய ஆட்சியை விமர்சித்து வருகின்றன. எனவே, திமுகவைக் களத்தில் தோற்கடிக்க விரும்பினால் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

ராமதாஸ் பற்றிய கேள்விக்குப் பதில்

நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என ராமதாஸ் கூறியிருந்தாரே என்ற கேள்விக்கு, “அந்த தேர்தலுக்கு இப்போது ஓராண்டு ஆகிவிட்டது. அப்போது யார் என்ன பேசினார்கள் என்பது கூட இப்போது முக்கியமில்லை. நேற்று நடந்ததையே யாரும் நினைவில் வைத்திருக்க மாட்டார்கள்” என்றார்.

அண்ணா பல்கலைக்கழக வழக்கில் வினா எழுப்பும் நாகேந்திரன்

அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை முறைகேடு வழக்கில் தீர்ப்பு விரைவில் வெளிவரும் நிலையில், “யார் அந்த ‘சார்’? முதல்வர் அவரை ஏன் காப்பாற்றுகிறார்கள்?” எனும் கேள்வியையும் நாகேந்திரன் எழுப்பினார்.

Follow Us