Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

PMK Intra-Party Row: பாமக கூட்டத்தில் திடீர் ட்விஸ்ட்! ராமதாஸ் நம் குலதெய்வம்.. தந்தையை புகழ்ந்த அன்புமணி ராமதாஸ்!

Anbumani Ramadoss Addresses PMK Crisis: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், சென்னை சோழிங்கநல்லூரில் கட்சி நிர்வாகிகளை இரண்டாவது நாளாக ஆலோசனை நடத்தினார். ராமதாஸ் குறித்த சர்ச்சைகளுக்குப் பிறகு, அன்புமணி, அய்யா ராமதாஸை குலதெய்வம் எனக் குறிப்பிட்டு, கட்சியின் கொள்கைகளைப் பின்பற்றி வெற்றி பெறுவோம் என உறுதியளித்தார். கட்சி அமைப்பில் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கவும், சமீபத்திய குழப்பங்களைத் தீர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்தார்.

PMK Intra-Party Row: பாமக கூட்டத்தில் திடீர் ட்விஸ்ட்! ராமதாஸ் நம் குலதெய்வம்.. தந்தையை புகழ்ந்த அன்புமணி ராமதாஸ்!
அன்புமணி ராமதாஸ்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 May 2025 15:26 PM

சென்னை, மே 31: சென்னை சோழிங்கநல்லூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 2வது நாளாக மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி (Pattali Makkal Katchi) நிர்வாகிகளை ஆலோசனை நடத்தி வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு பாமக நிறுவனர் ராமதாஸ் (PMK Founder Ramadoss) செய்தியாளர்களை சந்தித்தபோது, அன்புமணி ராமதாஸ் குறித்து பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டார். இது பாமக நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், பாமகக்குள் உட்கட்சி பூசலாக உருவெடுத்தது. இந்தநிலையில், இன்று அதாவது 2025 மே 31ம் தேதி பாமக நிர்வாகிகளிடையே பேசிய அன்புமணி ராமதாஸ் (Anbumani Ramadoss), அய்யா ராமதாஸ் எங்கள் குலச்சாமி, குலதெய்வம் என்றும், நான் தான் கட்சியின் தெய்வம் என்றும் தெரிவித்தார்.

அன்புமணி ராமதாஸ் பேசியது என்ன..?

பாமக நிர்வாகிகளுடனான 2ம் ஆலோசனை கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை புகழ்ந்து பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “அய்யா ராமதாஸ் நம்முடைய குலதெய்வம், அவர் நமது கொள்கை வழிகாட்டி.. தொலைநோக்கு சிந்தனையாளர். 45 ஆண்டுகாலம் கடுமையாக உழைத்து இந்த கட்சியை உருவாக்கியுள்ளார். சமூகநீதி, ஜனநாயகம், சமத்துவம், கல்வி, சுகாதாரம், மருத்துவம், வேளாண் வளர்ச்சி, நீ மேலாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவற்றையெல்லாம் நமக்கு கற்று கொடுத்துள்ளார். அவரது கொள்கையான தமிழ்நாட்டின் வளர்ச்சி, இட ஒதுக்கீட்டை எல்லாம் நாம் கடைப்பிடிப்போம். இதையெல்லாம், பின்பற்றி முன்னேறுவோம், வெற்றி பெறுவோம்.

அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பதிவு:

தமிழ்நாட்டை இவ்வளவு காலம் யார் யாரோ ஆட்சி செய்தார்கள். இனிவரும் காலத்தில் நாம் ஆட்சி செய்வோம். இது நம்முடைய காலம். அந்த காலமும் நெருங்கி வருகிறது. பாமக அதிக உறுப்பினர்களை சேர்த்தால் தங்க மோதிரமோ, தங்க சங்கிலியோ தர மாட்டேன். உண்மையான உறுப்பினர்களை மட்டும் சேர்த்தால் எனக்கு போதும். கடந்த காலங்களில் நிறைய அனுபவித்துவிட்டேன். பாமகவில் புதியதாக சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிற்கு தொடர்புகொண்டால் பீகாருக்கு அழைப்பு செல்கிறது.

பாமகவில் கடந்த 2 நாட்களாக பொறுப்புகள் கொடுக்குறதும், நீக்குறதுலாம் செல்லாது. நான் இருக்கிறேன், அடுத்த 10 நிமிடத்தில் என்னோட லெட்டர் வந்துவிடும், இந்த குழப்பங்கள் எல்லாம் விரைவில் சரியாகும். பாமக பொதுக்குழுவின்போது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நான்தான். பாமக கட்சியில் விதிகள் எல்லாம் இருக்கிறது. அதன்படி, பாமக தலைவராகிய நான்தான் கையெழுத்து போட வேண்டும். அவர்தான் எல்லாமே நியமனம் செய்ய வேண்டும்.” என்று தெரிவித்தார்.