AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வந்தே பாரத் ரயிலில் அசைவ உணவு நீக்கமா? குழப்பத்தில் பயணிகள்.. ரயில்வே விளக்கம்!

Chennai Vande Bharat Train : வந்தே பாரத் ரயிலில் அசைவ உணவு இல்லை என பயணி ஒருவர் கூறியதை பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அதாவது, காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவுக்கான ஆப்ஷன் இல்லை என அவர் புகார் அளித்திருந்தார். அதற்கு, ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

வந்தே பாரத் ரயிலில் அசைவ உணவு நீக்கமா? குழப்பத்தில் பயணிகள்.. ரயில்வே விளக்கம்!
வந்தே பாரத் ரயில்Image Source: Getty/x
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 31 May 2025 13:29 PM IST

சென்னை, மே 31 : வந்தே பாரத் ரயிலில் (Vande bharat train) உணவு குறித்து பயணிகளிடையே குழப்பம் எழுந்துள்ளது. காலை உணவில் அசைவ உணவு இல்லை என்று பயணி ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருந்தார். அதாவது, ஐஆர்சிடிசி செயலியில் வந்தே பாரத் ரயிலில் விருப்பமான உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவு ஆப்ஷன் இல்லை என பயணி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இந்த விஷயம் விவாதப் பொருளாக தற்போது மாறியுள்ளது. இதற்கு ஐஆர்சிடிசி தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் அதிகவேகமாக இயக்கக் கூடிய வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் 5க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னை – பெங்களூரூ, சென்னை – கோவை, சென்னை – திருநெல்வேலி, சென்னை – நாகர்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்படுகிறது.

வந்தே பாரத் ரயிலில் அசைவ உணவு நீக்கமா?

வந்தே பாரத் ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில், உணவு குறித்து புதிய சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது, ஐஆர்சிடிசி செயலியில் வந்தே பாரத் ரயிலில் விருப்பமான உணவை தேர்ந்தெடுக்கும் பகுதியில் காலை உணவிற்கான மெனுவில் அசைவ உணவு ஆப்ஷன் இல்லை என பயணி ஒருவர் குற்றச்சாட்டை எழுப்பி இருக்கிறது.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “சென்னை – நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நான் பயணம் செய்கிறேன். ஐஆர்சிடிசி செயலில் விருப்பமான உணவை தேர்ந்தெடுக்கும் ஆப்ஷனில் அசைவ உணவு இல்லை. அசைவ உணவு காலை வழங்கப்படவில்லை எனவும், மதியம், இரவு நேரத்தில் மட்டுமே அந்த ஆப்ஷன் காட்டப்படுவதாகவும். இது தொடர்பாக ரயில் நிர்வாகத்திடன் எந்த ஒரு முன்னறிவிப்பும் வரவில்லை” அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பயணி

ரயில்வே விளக்கம்

இதற்கு தனது எக்ஸ் தளத்தில் விளக்கம் அளித்த ஐஆர்சிடிசி, ”நீங்க (பயணி) பதிவிட்ட புகைப்படத்திலேயே அசைவ உணவு இருப்பதை காட்டுகிறது. வந்தே பாரத் ரயில்களில் காலை, மதியம், இரவு நேரங்களில் அசைவ உணவு வழங்கப்படுகிறது. மாலை நேர ஸ்நாக்ஸ் மட்டும் தான்  வழங்கப்படுகிறது. அசைவ உணவு கிடையாது. நீங்கள் டிக்கெட் முன்பதிவு செய்யும்போதே சைவ உணவு என்று புக் செய்துள்ளீர்கள். உங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேவை செய்ய கேட்டரிங் அணிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow Us