AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Chief Minister Breakfast Scheme: உப்புமாவுக்கு பதில் பொங்கல்! முதலமைச்சர் காலை உணவு மெனுவில் மாற்றம்..!

Tamil Nadu Schools Reopen: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகள் 2025 ஜூன் 2ஆம் தேதி மீண்டும் திறக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு உறுதியளித்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய தாமதம் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அரிசி உப்புமா நிறுத்தப்பட்டு, பொங்கல் மற்றும் ரவை உப்புமா வழங்கப்படும். திங்கள் மற்றும் புதன்கிழமைகளில் பொங்கல், வியாழக்கிழமைகளில் ரவை உப்புமா வழங்கப்படும்.

Chief Minister Breakfast Scheme: உப்புமாவுக்கு பதில் பொங்கல்! முதலமைச்சர் காலை உணவு மெனுவில் மாற்றம்..!
முதலமைச்சர் காலை உணவு திட்டம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 May 2025 21:23 PM IST

சென்னை, மே 31: தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் வருகின்ற 2025 ஜூன் 2ம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. முன்னதாக, தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பானது 2025 ஜூன் 9ம் தேதிக்கு தள்ளிப்போகும் என்ற செய்தி சமூக ஊடகங்களில் பரவியது. இந்த தாமதம் குறித்த ஊகங்களுக்கு தமிழ்நாடு அரசு (Tamil Nadu Government) அதிகாரப்பூர்வமாக அறிவித்து, முற்றுப்புள்ளி வைத்தது. அதன்படி, 2025 ஏப்ரல் 25ம் தேதி தொடங்கிய விடுமுறை, நாளையுடன் (2025 ஜூன் 1ம் தேதி) முடிவுக்கு வருகிறது. இந்தநிலையில், முதலமைச்சர் காலை உணவு திட்ட (Chief Minister’s Breakfast) மெனுவில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்தான அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்:

முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட மெனுவில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பான 2025 ஜூன் 2ம் தேதி பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்படும். அரிசி உப்புமா வழங்குவது நிறுத்தம், வாரத்தில் இரு தினங்கள் அதாவது திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் பொங்கல் வழங்கவும், வியாழக்கிழமைகளில் ரவை உப்புமா வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக நல ஆணையர் லில்லி வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் ஏற்பாட்டின் கீழ் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டமானது வார நாட்களில் வழங்கப்படுகிறது. இந்தநிலையில், இந்த முதலமைச்சர் காலை உணவு திட்ட மெனுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து பள்ளி சமையல் கூடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமையல் கூடங்களில் அரிசி உப்புமா வழங்குவது நிறுத்தப்பட்டு, அதற்கு பதிலாக திங்கள் கிழமைகளில் பொங்கல் வழங்கப்பட இருக்கிறது.

பழைய காலை உணவு மெனு:


வாரத்தில் இரு தினங்கள் திங்கள் மற்றும் புதன் கிழமைகளில் பொங்கள் வழங்கப்பட வேண்டும். எனவே, பள்ளிகள் திறப்பான 2025 ஜூன் 2ம் தேதி திங்கட்கிழமை பொங்கல் மற்றும் காய்கறி சாம்பார் வழங்கப்பட வேண்டும். பள்ளி சமையல் கூடங்களில் திங்கட்கிழமைகளில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த கோதுமை ரவை உப்புமா இனிமேல் வியாழக்கிழமை நாட்களில் வழங்கப்படும். பள்ளி சமையல் ஒப்பந்ததார்கள் மற்றும் ஒருங்கிணைந்த சமையல் கூட ஒப்பந்ததார்கள் இதனை செயல்படுத்துவதை கண்காணிக்குமாறு அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Follow Us