காலையிலேயே குட் நியூஸ்.. அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை.. எவ்வளவு தெரியுமா?
chennai gas cylinder price : சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 குறைந்துள்ளது. இதன் மூலம், சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,881க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில், வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ865.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் விலை (June Gas Cylinder Price) ரூ.25 குறைந்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை (Commercial Gas Cylinder Price) ரூ.1,906ல் இருந்து ரூ.1,881 ஆக குறைந்துள்ளது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ865.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாத தொடக்கத்தில் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படும். இந்த விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. ஒவ்வொரு மாதமும் சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அரசுக்கு சொந்மான இந்துஸதான் பெட்ரோலியம் கார்ப்பரேஷ லிமிடெட், பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் ஆகியவை ஒவ்வொரு மாதமும் கேஸ் சிலிண்டர்களின் விலையை மாற்றி அமைக்கின்றனர்.
அதிரடியாக குறைந்த கேஸ் சிலிண்டர் விலை
சர்வதேச அளவில் இருக்கும் சந்தை நிலவரத்தை பொறுத்து தான் இந்த நிறுவனங்கள் சமையல் எரிவாயு விலையை நிர்ணயிக்கின்றன. அந்த வகையில், 2025 கடந்த மே மாதம் சென்னையில் கேஸ் சிலிண்டர் விலை குறைந்திருந்தது.
19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டர் விலை ரூ.15 குறைந்து, ரூ.1,906 ஆக விற்பனை செய்யப்பட்டது. வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமின்றி ரூ.865க்கும் விற்பனை செய்யப்பட்டது.




இந்த நிலையில், 2025 ஜூன் 1ஆம் தேதியான இன்று கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட தகவலின்படி, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 குறைந்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,906ல் இருந்து ரூ.1,881 ஆக குறைந்துள்ளது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ865.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மற்ற மாநிலங்களின் நிலவரம்
தலைநகர் டெல்லியில் 19 கிலோ எடையுள்ள வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,723.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து, கொல்கத்தாவில் 19 கிலோ கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,826 ஆகவும், மும்பையில் ரூ.1,674 ஆகவும், பெங்களூரவில் ரூ.1,796 ஆகவும், நொய்டாவில் ரூ.1,725 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதே நேரத்தில் 14 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டல் விலை டெல்லியில் ரூ.853, கொல்கத்தாவில் ரு.879 ஆகவும், மும்பையில் ரூ.852 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வீட்டு உபயோக சிலிண்டர் விலை பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் மானிய விலையில் ரூ.550 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.