Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கொட்டும் மழை.. சென்னையில் எப்படி? வானிலை மையம் அலர்ட்

Tamil Nadu Weather Alert : தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழையே பெய்யக் கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கொட்டும் மழை.. சென்னையில் எப்படி? வானிலை மையம் அலர்ட்
மழை
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 01 Jun 2025 06:47 AM

சென்னை, ஜூன் 01 : தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம்  (tamil nadu weather update) தெரிவித்துள்ளது. சென்னையிலும் கூட லேசான முதல் மிதமான அளவிலேயே மழை பொழிவு இருக்கும் என தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொடங்கியதை முதல் தமிழக்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்தது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. கோவை, நீலகிரி, தென்காசி, நெல்லை, தேனி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. இதனால், நீர் நிலையங்களில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. 2025 மே 24ஆம் தேதி கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை, அடுத்தடுத்து அனைத்து தென்மாநிலங்களில் தொடங்கியது.

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு கொட்டும் மழை

எப்போது ஜூன 1ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில், 2025ல் முன்கூட்டியே தொடங்கியுள்ளது. இதனால், மே மாதத்தில் வெயிலின் தாக்கமே இல்லை. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது.

2025 மே 31ஆம் தேதியான நேற்று கூட நீலகிரி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. இந்த நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.

மேற்கு திசை வேறு மாறுபாடு காரணமாக, 2025 ஜூன் 1ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த 7 நாட்களும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

சென்னையில் எப்படி?


சென்னையை பொறுத்தவரை, 2025 ஜூன் 1ஆம் தேதியான இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 முதல் 38 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 முதல் 28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா, “சென்னையை பொறுத்தவரை கடந்த 3 மாதங்களில் ஒருநாள் கூட 40 டிகிரி செல்சியஸ் வெப்பத்தை தொடவில்லை. தமிழகத்தில் பருவமழை 2025ஆம் ஆண்டில் 90 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு கோடை காலத்தில் பலத்த மழை பெய்துள்ளது” என்று கூறினார்.

இதுகுறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறுகையில், “2004ஆம் ஆண்டு பிறகு முதல்முறையாக மீனம்பாக்கம், நுங்கம்பாகத்தில் 40 டிகிரி செல்சியஸ் பதிவாகவில்லை. சென்னை மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் வெப்பநிலை குறைவாகவே பதிவாகி இருக்கிறது” என்று கூறினார்.