வீடி தேடி வரும் அரசு திட்டத்தில் 5 லட்சம் வேலை வாய்ப்பு.. பல்வேறு அதிரடி வாக்குறுதிகள்… தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!
TVK Full Election Manifesto: தமிழகத்தில் வீடி தேடி வரும் அரசு திட்டத்தில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அதிரடி வாக்குறுதிகளை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டு அறிவித்தார். முழு விவரம் இந்தப் பதிவில்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் முழு தேர்தல் அறிக்கையே கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார். தேர்தல் அறிக்கையின் முதல் பிரதிதியை விவசாயி நாராயணனிடம் விஜய் வழங்கினார். இதைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் பேசியதாவது: தமிழக மக்களின் நலனை தவெகவுக்கு முக்கியமாகும். தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பின்னர் செய்வோம். இதில், சொல்லாததையும் செய்வோம். ஒவ்வொரு பெண்ணும் அதிகாரம் மிக்கவர் என்பவரை பறைசாற்றும் வகையில்,
வெற்றி மகளிர் திட்டம்: 60 வயதுக்கு உட்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ.2,500, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள், மணப்பெண்ணுக்கு தரமான பட்டு சேலை, 8 கிராம் தங்கம். 1 முதல் 12- ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.15,000, சுய உதவி குழுக்களுக்கு ரூ.5 லட்சம் வட்டி இல்லா கடன்.
மேலும் படிக்க: “கரூர்ல தோற்போம்னு தெரிஞ்சு கோவைக்கு ஓடி வந்த அரக்கன்”… செந்தில் பாலாஜியைச் சாடிய இபிஎஸ்!




உலகத்தரம் வாய்ந்த கல்விக்கான உத்தரவாதம்: 100 காமராஜர் தரம் கொண்ட பள்ளிகள், அனைத்து மாவட்டங்களிலும் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை தரமான கல்வி வழங்கும் இலவச உண்டு உறைவி பள்ளிகள், ஒவ்வொரு பள்ளியிலும் நவீன உள்கட்டமைப்பு மற்றும் உலக தரம் வாய்ந்த கல்வி வழங்கப்படும். ஒவ்வொரு தமிழ் மாணவரின் கல்வி கனவுக்கும் ஆதரவளிக்கும் வகையில் இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரை ரூ.20 லட்சம் பிணையில்லா கல்விக் கடனுக்கான உத்தரவாதம். எதிர்கால திறன் பயிற்சி மையங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இலவச போட்டி தேர்வு பயிற்சி.
மக்கள் நலம் பேணும் சுகாதார உத்தரவாதம்: போதைப்பொருள் இல்லா தமிழகம். பள்ளி கல்லூரிகளில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மன்றங்கள். ஒரு குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் வரையிலான யூனிவர்சல் ஹெல்த் இன்சூரன்ஸ். இதில், புற்றுநோய், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இருதய அறுவை சிகிச்சை உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். ஒவ்வொரு குடிமகனுக்கும் வருடாந்திர பரிசோதனை மற்றும் மலிவு விலை மருந்துகள் வழங்கப்படும்.
இளைஞர்களுக்கு ஏணி படிகளாக இருக்கும் உத்தரவாத திட்டம்: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தவர்களில் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.4,000, 12- ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ டிப்ளமோ படித்தவர்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கப்படும். ஆண்டுதோறும் 5 லட்சம் இன்டர்ன்ஷிப் பயிற்சி பெறும் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.10,000, ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.8,000. தொழில் முனைவராக விரும்பும் இளைஞர்களுக்கு ரூ.25 லட்சம் பிணையில்லா தொழில் முனைவோர் கடனுக்கான உத்தரவாதம்.
முதல்வர் மக்கள் சேவை நண்பன்: ஒவ்வொரு குடும்பமும் தங்கள் வீட்டு வாசலிலேயே அரசு திட்டங்களை பெரும் வகையில் தமிழகம் முழுவதும் ரூ.18,000 ஊதியத்தில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும். அரசு தேர்வுகளுக்கான ஆள் சேர்ப்பு கால அட்டவணை உருவாக்கப்பட்டு அதனை முறையாக முறையாக செயல்படுத்தப்பட்டு காலி பணியிடங்களை இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.
உழவர்கள் உள்ளம் மகிழும் திட்டம்: 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு வேளாண் கூட்டுறவு சங்கங்களில் இருந்து பெறப்படும் அனைத்து பயிர் கடன்களும் முழு தள்ளுபடி. 5 ஏக்கருக்கும் அதிகமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகள் பெறும் வேளாண் கூட்டுறவு சங்க கடன் பயிர்களுக்கு 50 சதவீதம் தள்ளுபடி. நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 குறைந்தபட்ச ஆதரவு விலை, கரும்பு டன்னுக்கு ரூ.4,500, எண்ணெய் விவசாயிகளுக்கு ஒப்படை தேங்காய் விலை நிலைப்படுத்துதல். குத்தகை விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்களுக்கு நேரடியாக ஆண்டுக்கு ரூ.10 ஆயிரம். என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அறிவித்தார்.
மேலும் படிக்க: தொகுதி மறுவரையறைக்கு எதிராக கைகோர்த்த முதல்வர் ஸ்டாலின் – ராகுல்.. நாடாளுமன்றத்தில் அதிரடி காட்டத் திட்டம்..