AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கிடைத்தது முழு பெரும்பான்மை – ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரிய விஜய்

TVK Vijay : ஆட்சியமைக்க தேவையான முழு பெரும்பான்மை கிடைத்த நிலையில் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க விஜய் உரிமை கோரினார். இதனையடுத்து தவெக தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழா மே 11, 2026 திங்கள் கிழமை நடைபெற விருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிடைத்தது முழு பெரும்பான்மை – ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமைகோரிய விஜய்
ஆளுநருடன் விஜய்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 09 May 2026 22:51 PM IST

ஆட்சியமைக்க தேவையான முழு பெரும்பான்மை கிடைத்த நிலையில் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க விஜய் உரிமை கோரினார். தற்போது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, இந்திய முஸ்லீம் லீக் என 120 எம்எஎல்ஏகளின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தவெக தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழா மே 10, 2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து விஜய் ஆட்சியமைக்க போதிய ஆதரவு உள்ள நிலையில் ஆளுநர் விஜய்யை முதல்வராக பதவியேற்க அழைப்பு விடுத்தார். இதனையடுத்து விஜய்யின் பதவியேற்பு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறவிருக்கிறது.

இதையும் படிக்க : ஸ்டாலினிடம் தெரிவித்துவிட்டு தான் தவெகவுக்கு ஆதரவு – திருமாவளவன் பகிர்ந்த தகவல்

ஆளுநரை சந்தித்த விஜய்

 

நீண்ட இழுபறிகளுக்கு பிறகு தவெக தலைவர் விஜய் மே 9, 2026 இன்று தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து தனது பெரும்பான்மையை நிரூபித்தார். இதனை ஆளுநரும் ஏற்றுக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து விஜய் மே 10, 2026  அன்று காலை 10 மணிக்கு பதவியேற்கிறார்.  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் விஜய்யுடன் 9 அமைச்சர்கள் பதவியேற்கின்றனர்.

தவெகவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள், முஸ்லீம் லீக் கட்சி, ஆகியவை வெளியில் இருந்து ஆதரவு தருவதாகவும் தாங்கள் திமுக கூட்டணியில் தொடர்வோம் என்று தெரிவித்தனர். இது தொடர்பாக பேசிய திருமாவளவன், தவெக RSS-ன் பிள்ளைகள் என்ற விமர்சனத்தில் எனக்கு எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை. விசிகவால் தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வரக்கூடாது என்பதற்காக வெளியிலிருந்து தவெக ஆட்சிக்கு ஆதரவு அளித்துள்ளோம் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : தவெக ஆட்சி அமைக்க விசிக ஆதரவு – கடிதத்தை வழங்கினார் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன்!

இந்த நிலையில் விஜய் சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் 3 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளார். அதன் படி வருகிற மே 13 ஆம்  தேதிக்குள் சட்டமன்றத்தில் தவெக தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். ஏற்னவே காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய முஸ்லீம் லீக் கட்சிகள் ஆகியவை ஆதரவு அளித்துள்ள நிலையில் விஜய் பெருமான்மையை நிரூபிப்பதில் சிக்கல் இருக்காது என கூறப்படுகிறது. இதனையடுத்து விஜய் முதல்வராக பதவியேற்பதை நாடே எதிர்நோக்கி காத்திருக்கிறது.

Follow Us