Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

“SIR” குறித்து உதயநிதிக்கே சரியாகத் தெரியவில்லை: விளாசிய தமிழிசை செளந்தரராஜன்!

Tamilisai soundararajan explains about SIR: சிறப்பு தீவிர திருத்த (SIR) செயல்முறைக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதனிடையே, SIR குறித்து திமுக பயப்பட வேண்டியது ஏன் என தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“SIR” குறித்து உதயநிதிக்கே சரியாகத் தெரியவில்லை: விளாசிய தமிழிசை செளந்தரராஜன்!
உதயநிதி ஸ்டாலின், தமிழிசை செளந்தர்ராஜன்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 02 Nov 2025 19:18 PM IST

சென்னை, நவம்பர் 02: தேர்தல் ஆணையம் நடத்தி வரும் சிறப்பு தீவிர திருத்த (SIR) செயல்முறை குறித்த புரிதல் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கே இல்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். வழக்கம்போல் மத்திய அரசு எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் எதிர்க்க வேண்டும் என்ற மனநிலையிலேயே சிறப்பு தீவிர திருத்த செயல்முறையை திமுக எதிர்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் நடத்தி வரும் சிறப்பு தீவிர திருத்த செயல்முறை பாஜக ஆளும் மாநிலங்களிலும் நடைபெறுவதாக கூறி விளக்கமளித்துள்ள அவர், இதுகுறித்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசியது குறித்த வீடியோவையும் பகிர்ந்து விமர்சித்துள்ளார்.

மேலும் படிக்க: வாக்காளர் சிறப்பு திருத்தம்.. தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? – தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம்..

திமுகவின் வேஷம் வெளிச்சமானது:

இதுகுறித்து தமிழிசை செளந்தரராஜன் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது, தேர்தல் ஆணையம் நடத்தி வரும் “SIR – Special Intensive Revision” (சிறப்பு தீவிர திருத்தம்) என்ற செயல்முறையை, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் “Special Intensive Registration” (சிறப்பு தீவிர பதிவு) எனத் தவறாக குறிப்பிடுகிறார். அவருக்கே “SIR” என்பதன் பொருள் சரியாகத் தெரியவில்லை என்றால், இதன் உண்மையான செயல்முறையும் அவருக்கு தெரியாது என்பதில் ஐயமில்லை. இருந்தாலும் இதை அரசியல் காரணங்களுக்காக இதை எதிர்க்கின்றனர்.

SIR செயல்முறை நோக்கங்கள்:

புதிய வாக்காளர்கள் (18 வயது நிறைவு பெற்றவர்கள்) சேர்த்தல், மரணமடைந்தவர்களின் பெயர்கள் நீக்குதல், இரட்டை வாக்குரிமை இருந்தால் அவற்றை அகற்றுதல் ஆகியவை மட்டுமே SIR நோக்கங்கள் என்று கூறியுள்ளார். இந்த செயல்முறை முழுவதும் மிகுந்த வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறும். இந்த “SIR” செயல்முறை தமிழகத்தில் மட்டும் அல்ல, மொத்தம் 12 மாநிலங்களில் நடைபெறுகிறது. அதில் பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களும் உள்ளன.

மேலும் படிக்க: சேலம், கோவை, திருப்பூர் வழியாக நின்று செல்லும் புதிய வந்தே பாரத் ரயில்.. முழு விவரம்..

ஆனால், திமுகவுக்கு இந்த வாக்காளர் பட்டியல் சுத்திகரிப்பு செயல்முறை பிடிக்கவில்லை. ஏனெனில் அவர்கள் எப்போதும் தவறான வாக்காளர் பட்டியல் முறைகேடுகளால் வெற்றிபெறும் கட்சி அவர்களே. சமீபத்தில் திமுக தீவிர முயற்சியால் சேர்த்த போலி வாக்காளர்களை, தேர்தல் ஆணையம் நடத்தி வரும் இந்த தீவிர திருத்தம் கண்டுபிடித்து அகற்றிவிடும் என்பதாலே அவர்கள் SIR கண்டு பயப்படுகின்றனர் என்றும் விமர்சித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பேட்டி:

திமுக ஏன் ஓடி ஒளிய வேண்டும்?

திமுக இந்த அரசியலமைப்பு சார்ந்த சட்டபூர்வ செயல்முறையை குழப்ப வேண்டாம் என்று கேட்டுகொண்ட அவர், சர்வ கட்சி கூட்டம் என்ற பெயரில் திமுக கூட்டணி கட்சிகள் நடத்துவது அரசியல் நாடகம் என்றும் சாடியுள்ளார். மேலும், SIR கண்டு ஏன் பயப்படுகிறீர்கள்? மடியில் கணம் இருந்தால் தானே பயப்பட வேண்டும். திமுக ஏன் ஓடி ஒளிய வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.