வாக்காளர் சிறப்பு திருத்தம்.. தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? – தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம்..
SIR - Vijay Statement: முதல் கட்ட சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படாத நிலையில், இரண்டாம் கட்ட திருத்தத்தை மேற்கொள்வது எந்த வகையிலும் சரியான நகர்வாக இருக்க முடியாது. தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடி 36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்,
சென்னை, நவம்பர் 2, 2025: வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி, தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையில், “வாக்காளர் திருத்த நடைமுறை முடிவடைந்து, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் பிரதி செய்யப்பட்டவுடன், கீழ்க்கட்சிகளுக்கு டிஜிட்டல் இயந்திரத்தில் வாசிக்கக்கூடிய வடிவில் வழங்கப்பட வேண்டும்” என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு உட்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை தொடங்க உள்ளதாக அறிவித்திருந்தது. தமிழகத்தில், வரவிருக்கும் நவம்பர் 4, 2025 அன்று இந்த பணிகள் தொடங்க உள்ளதாகவும், இதற்காக 70 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு நாளை, அதாவது நவம்பர் 3, 2025 அன்று பயிற்சி அளிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9, 2025 அன்று வெளியிடப்படவுள்ளதுடன், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7, 2026 அன்று வெளியிடப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தணி அறிவிக்கப்பட்டதிலிருந்து, தமிழகத்தின் பல அரசியல் கட்சி தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதிமுக தரப்பில் இதற்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: அக்டோபர் மாதம் 36% அதிக மழை.. இனி வறண்ட வானிலையே இருக்கும் – பிரதீப் ஜான் சொன்ன தகவல்..
SIR – தமிழக வெற்றிக் கழக தலைவர் அறிக்கை:
இந்த நிலையில், இதுகுறித்து தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: “தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் மேற்கொள்ளப்பட இருப்பதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பீகார் மாநிலத்தில் வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து அறிவிப்பு வெளியான போதே, தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அதை கடுமையாக எதிர்த்து அதன் உள்நோக்கம் குறித்து எச்சரித்தோம்.
முதல் கட்ட சிறப்பு தீவிரத் திருத்தம் குறித்து தெளிவான விளக்கங்கள் அளிக்கப்படாத நிலையில், இரண்டாம் கட்ட திருத்தத்தை மேற்கொள்வது எந்த வகையிலும் சரியான நகர்வாக இருக்க முடியாது. தமிழ்நாட்டில் மொத்தம் 6 கோடி 36 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களின் பெயர்களை வெறும் 30 நாட்களில் எவ்வாறு சரிபார்க்க முடியும்?
மேலும் படிக்க: சேலம், கோவை, திருப்பூர் வழியாக நின்று செல்லும் புதிய வந்தே பாரத் ரயில்.. முழு விவரம்..
சிறுபான்மையினரின் வாக்குகள் தான் குறியா?
இந்த வாக்காளர் சிறப்பு தீவிரத் திருத்தத்தின் வாயிலாக, பீகாரில் நடைபெற்றது போல, தமிழ்நாட்டிலும் சிறுபான்மையினர் உள்ளிட்ட சில குறிப்பிட்ட வாக்குகள் குறிவைக்கப்படும் வாய்ப்பு உள்ளது என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன. அப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்?
எனவே, ‘சிறப்பு தீவிரத் திருத்தம்’ என்கிற குழப்பமான நடைமுறையை விடுத்து, ஏற்கனவே இருந்த நடைமுறையே தொடர வேண்டும். அண்டை மாநிலமான கேரள அரசு, சிறப்பு தீவிரத் திருத்தத்திற்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் ஏற்றுள்ளது. கேரள அரசின் இந்நடவடிக்கை, அந்நாட்டின் மக்களின் உரிமைகளுக்கு அளிக்கும் அக்கறையை வெளிப்படுத்துகிறது.
தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்?
ஆனால், சிறப்பு தீவிரத் திருத்தத்தை கடுமையாக எதிர்க்கிறது என்று காட்டிக் கொள்ளும் திமுக, இதுகுறித்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாதது ஏன்? தேர்தல் நெருக்கத்தில் திமுக ஏற்பாடு செய்துள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் நோக்கம் — திமுக அரசுக்கு எதிராக வரிசையாக எழுந்து வரும் ஊழல் புகார்களிலிருந்து மக்களின் கவனத்தைத் திருப்பும் கபட நாடக அரசியல் மட்டுமே,” என தெரிவித்தார்.