AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தவெகவினர் தான் ஓட்டுக்கு அதிக காசு கொடுக்கிறார்கள்.. பெ.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!

CPI Former Leader P Shanmugam Allegation On TVK | தமிழகத்தில் சில தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், தவெக தான் ஓட்டுக்கு அதிக காசு கொடுப்பதாக மக்கள் கூறுகின்றனர் என்று சிபிஐ முன்னாள் மாநில தலைவர் சண்முகம் கூறியுள்ளார்.

தவெகவினர் தான் ஓட்டுக்கு அதிக காசு கொடுக்கிறார்கள்.. பெ.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டு!
இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் தலைவர் பெ.சண்முகம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 01 Oct 2026 13:29 PM IST

சென்னை, அக்டோபர் 01 : இடைத்தேர்தலுக்கு தமிழக வெற்றிக் கழகம் (TVK – Tamilaga Vettri Kazhagam) தான் ஓட்டுக்கு அதிக பணம் கொடுக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party Of India) முன்னாள் மாநில செயலாளர் பெ.சண்முகம் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். தாங்கள் வாக்கு சேகரிக்க சென்றபோது பொதுமக்கள் தங்களிடம் இது குறித்து கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இடைத்தேர்தலுக்கு தவெக தான் அதிக பணம் கொடுப்பதாக சண்முகம் கூறியுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இடைத்தேர்தல் – தீவிர வாக்கு சேகரிப்பில் கட்சிகள்

தமிழகத்தில் சில தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் திராவிட கட்சிகளை ஓரம் கட்டி தவெக ஆட்சியை பிடித்துள்ள நிலையில், தவெகவின் ஆட்சி மக்கள் மனதில் எத்தகைய இடத்தை பிடித்துள்ளது என்பதை உணர்த்தும் தேர்தலாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இதன் காரணமாக தான், கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க : தமிழகத்தில் இன்று மூன்று மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை.. 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

தவெகவினர் ஓட்டுக்கு அதிக பணம் கொடுக்கின்றனர் – சண்முகம்

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மதுராந்தகத்தில் தவெகவினர் தான் ஓட்டுக்கு அதிக பணம் கொடுக்கின்றனர். நாங்கள் அங்கு பிரசாரத்திற்கு சென்றபோது நோட்டீஸ் கொடுத்து வாக்கு கேட்டோம். அப்போது எல்லோரும் பணம் கொடுக்கிறார்கள், நீங்கள் பணம் கொடுக்கவில்லையே என்று சில மக்கள் எங்களிடம் கேட்டார்கள்.

இதையும் படிங்க : “என்னை அசிங்கமாக பேசுறீங்க”.. மேடையில் தேம்பி அழுத சத்யபாமா – ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்

அவர்களிடம் எந்த எந்த கட்சியினர் பணம் கொடுத்தார்கள் என கேட்டோம். அந்த மக்கள் தவெகவினர் தான் அதிக பணம் கொடுத்ததாக கூறினார்கள். தூய சக்தி, நாங்கள் ஓட்டுக்கு பணம் கொடுக்க மாட்டோம் என்று கடந்த தேர்தலில் முதலமைச்சர் விஜய் பிரசாரம் செய்தார். இப்போதும் அப்படியே பிரசாரம் செய்து வருகிறார். ஆனால், மதுராந்தகத்தில் பொதுமக்கள் கொடுத்திருக்கும் வாக்குமூலம் இது.

தவெக அதிக பணம் கொடுக்கிறார்கள், நீங்கள் கொஞ்சமாவது கொடுங்கள் என்று எங்களிடம் பேரம் பேசும் நிலையை ஏற்படுத்தியுள்ளார்கள் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us