AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஜிபிஎஸ் பொருத்தாத லாரிகளில் ஜல்லி, எம் சாண்ட் ஏற்ற தடை.. இன்று முதல் புதிய ரூல்ஸ் அமல்!

GPS Mandatory for Sand or Gravel Lorries | தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்பான புகார்கள் தொடர்ந்து எழுந்து வந்த நிலையில், அது தொடர்பான முக்கிய நடவடிக்கையை தமிழ்நாடு அரசு கையில் எடுத்துள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜிபிஎஸ் பொருத்தாத லாரிகளில் ஜல்லி, எம் சாண்ட் ஏற்ற தடை.. இன்று முதல் புதிய ரூல்ஸ் அமல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 01 Oct 2026 11:00 AM IST

சென்னை, அக்டோபர் 01 : ஜிபிஎஸ் (GPS – Global Positioning System) பொருத்தாத லாரிகளில் ஜல்லி, எம் சாண்ட் ஏற்றிச் செல்ல இன்று (ஆக்டோபர் 01, 2026) அனுமதி இல்லை என்று கனிம வளத்துறை உத்தரவிட்டுள்ளது. கனிம வளங்கள் அண்டை மாநிலங்களுக்கு கடத்தப்படுவதை தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில், லாரிகளில் ஜிபிஎஸ் கருவி கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஜிபிஎஸ் பொருத்தாத லாரிகளில் ஜல்லி, எம் சாண்ட் ஏற்ற தடை

தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாக தொடர் புகார்கள் எழுந்து வந்தன. குறிப்பாக தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கடந்தப்பட்டு வந்ததாக கூறப்பட்டு வந்தது. மேலும் அனுமதி இல்லாத லாரிகள் மூலம் தமிழகத்தில் இருந்து கனிம வளங்கள் எடுக்கப்படுவது தொடர்பான சிக்கல்களும் நீடித்து வந்தது. இந்த நிலையில் தான், இது குறித்து தமிழக அரசு முக்கிய நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது.

இதையும் படிங்க : எளியவர்களை நிறுத்தி மன்னர்களை தோற்கடித்தோம்.. திமுகவின் கிளையாக மாறிவிட்ட அதிமுக.. முதல்வர் விஜய் காட்டம்

அரசு முக்கிய அறிவிப்பு

அதாவது கனிம வளங்களை ஏற்றிச் செல்லும் லாரிகளில் கட்டாயம் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட வேண்டும் என அரசு அறிவித்தது. லாரிகள் ஜிபிஎஸ் கருவி பொருத்த நேற்று (செப்டம்பர் 30, 2026) வரை அவகாசம் வழங்கப்பட்டது. ஆனால், பெரும்பாலான லாரிகளில் இன்னும் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்படாமல் உள்ளது. இந்த நிலையில், அந்த லாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இதையும் படிங்க : காங்கிரஸ்- திமுக கூட்டணி எதிர்காலத்தில் அமையுமா.. அமைச்சர் விஸ்வநாதன் கூறிய பகீர் வார்த்தை!

கனிம வளத்துறை இணை இயக்குனர் கூறியது என்ன?

கனிம வளங்கள் முறைகேடாக கடத்தப்படுவதை தடுக்க லாரிகளில் ஜிபிஎஸ் கருவி பொருத்த லாரி உரிமையாளர்களுக்கு கால அவகாசம் கொடுக்கப்பட்டது. நேற்றுடன் அந்த கால அவகாசம் நிறைவு பெற்றது. தமிழகத்தில் மொத்தம் சுமா 1.40 லட்சம் லாரிகள் கனிம வளம் ஏற்றுவதற்கு விருப்பம் தெரிவித்து பதிவு செய்துள்ளன. ஆனால், இதுவரை வெறும் 24,000 லாரிகளில் மட்டுமே ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

Follow Us