AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சத்தியபாமா காதில் இதை தான் சொன்னேன்.. அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம்!

Minister Rajmohan's Clarification On Sathyabama's Tears | தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தவெக வேட்பாளர் சத்தியபாமா மேடையில் கண்ணீர் சிந்தினார். இந்த நிலையில், அமைச்சர் ராஜ் மோகன் காதில் சொன்னதால் தான் அவர் அழுதார் என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

சத்தியபாமா காதில் இதை தான் சொன்னேன்.. அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம்!
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் ராஜ் மோகன்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 01 Oct 2026 12:53 PM IST

சென்னை, அக்டோபர் 01 : தாராபுரம் இடைத்தேர்தலில் (Dharapuram By Election) போட்டியிடும் சத்தியபாமா, தேர்தல் பிரசாரத்தின் போது மேடையில் கண்ணீர் சிந்தியதற்கு, அமைச்சர் ராஜ்மோகன் காதில் ஏதோ கூறியது தான் காரணம் என திமுகவினர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்த நிலையில், அமைச்சர் ராஜ் மோகன் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார். இந்த நிலையில், சத்தியபாமா கண்ணீர் சிந்தியதற்கு காரணம் என்ன என்பது குறித்து அமைச்சர் ராஜ் மோகன் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மேடையில் கண்ணீர் சிந்திய தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமா

தாராபுரத்தில் அக்டோபர் 06, 2026 அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தவெக சார்பில் சத்தியபாமா போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து நேற்று (செப்டம்பர் 30, 2026) அன்று முதலமைச்சர் ஜோசப் விஜய் பிரசாரம் செய்தார். அப்போது வேட்பாளர் சத்தியபாமா மேடையில் பேசினார். தான் அதிமுகவில் இருந்து வெளியேறி குறித்து பேசிக்கொண்டு இருந்த அவர், அமைச்சர் ராஜ் மோகன் ஏதோ காதில் சொன்னதும் கண்ணீர்விட்டு அழத் தொடங்கினார். அப்போது, மேடையில் நின்றுக்கொண்டு இருந்த முதலமைச்சர் விஜய் அவரை தேற்றினார்.

இதையும் படிங்க : “என்னை அசிங்கமாக பேசுறீங்க”.. மேடையில் தேம்பி அழுத சத்யபாமா – ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்..

நடந்தது இதுதான் – அமைச்சர் ராஜ்மோகன் விளக்கம்

இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலான நிலையில், அமைச்சர் ராஜ் மோகன் காதில் ஏதோ சொன்னதால் தான் சத்தியபாமா மேடையில் அழுதார். ராஜ் மோகன் சொன்னதன் அடிப்படையில் தான் அவர் மேடையில் அழுதார் என்று திமுகவினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் விமர்சனம் செய்தனர். இந்த நிலையில் தான், அமைச்சர் ராஜ் மோகன் அது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க : “எளியவர்களை நிறுத்தி மன்னர்களை தோற்கடித்தோம்.. திமுகவின் கிளையாக மாறிவிட்ட அதிமுக.. முதல்வர் விஜய் காட்டம்..

செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தப்போது கூறியதாவது, மக்களும், முதலமைச்சரும் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். 8 மணி நேரத்திற்கு மேலாக மக்கள் காத்திருக்கின்றனர். அதனால் விரைவாக பேசி முடிக்க வேண்டும் என்று தான் கூறினேன் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Follow Us