AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பெண் வேட்பாளர் உருவக் கேலி புகார்.. “தேவைப்பட்டால் ஸ்டாலின் பிரசாரத்துக்கே கட்டுப்பாடு வேண்டும்!”.. தவெக அதிரடி மனு!!

TVK Files Complaint Against MK Stalin: தாராபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தவெக பெண் வேட்பாளரை உருவக் கேலி செய்ததாகக் கூறி, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு எதிராகத் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையில் அதிரடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஸ்டாலினின் பிரச்சாரத்திற்குத் தேவைப்பட்டால் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்றும் தவெக வலியுறுத்தியுள்ளது.

பெண் வேட்பாளர் உருவக் கேலி புகார்.. “தேவைப்பட்டால் ஸ்டாலின் பிரசாரத்துக்கே கட்டுப்பாடு வேண்டும்!”.. தவெக அதிரடி மனு!!
மு.க.ஸ்டாலின்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 03 Oct 2026 11:34 AM IST

சென்னை, அக்.03: தமிழகத்தில் இடைத்தேர்தல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ள சூழலில், அரசியல் தலைவர்களின் பிரசார உரைகளும் விமர்சனங்களும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. தாராபுரம் தொகுதிக்கான பிரசாரத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தாராபுரத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், மேடையில் பேசிய சில கருத்துகள் தற்போது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. எதிர்த்தரப்பில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் வேட்பாளர் குறித்து அவர் தெரிவித்த கருத்துகள் பெண் மாண்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி, தவெக சார்பில் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையில் சட்டரீதியான நடவடிக்கை கோரிப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: எதிர்ப்பை மீறி காதல் திருமணம்.. வீட்டின் கதவை உடைத்து கழுத்தில் கத்தி வைத்து பெண்ணை கடத்தி சென்ற பெற்றோர்.. பகீர் சம்பவம்!!

உருவக் கேலி செய்ததாகக் குற்றச்சாட்டு:

தாராபுரத்தில் நடைபெற்ற திமுக பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய மு.க.ஸ்டாலின், தவெக சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளரின் பெயரைச் சுட்டிக்காட்டி, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் முன்னிலையில் அவரை உருவக் கேலி செய்து எள்ளி நகையாடியதாகத் தவெக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பொதுவாழ்வில் இருக்கும் மூத்த தலைவர்கள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்கள் இளைய தலைமுறையினருக்குச் சரியான முன்மாதிரியாகத் திகழ வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, ஒரு பெண்ணின் மாண்பிற்கும் கண்ணியத்திற்கும் கலங்கம் விளைவிக்கும் வகையில் பொது மேடையில் பேசியது முற்றிலும் தவறானது என்று தவெக தனது புகாரில் சுட்டிக்காட்டியுள்ளது.

சட்டரீதியான நடவடிக்கை எடுக்க கோரிக்கை:

இந்த விவகாரம் தொடர்பாகத் தேர்தல் ஆணையத்திலும் காவல்துறையிலும் அளிக்கப்பட்ட புகார் மனுவில் தவெக சார்பில் முக்கியக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. பெண் வேட்பாளரை இழிவுபடுத்திப் பேசியதற்காக, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிமுறைகளின் கீழும் வழக்குப்பதிவு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரசியல் பிரசாரங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வகையிலான பேச்சுக்கள் தொடர்வதைத் தடுக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் மு.க.ஸ்டாலின் அவர்களின் தேர்தல் பிரசாரத்திற்குத் தகுந்த கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் விதிக்க வேண்டும் என்றும் தவெக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : வாக்காளர்களுக்கு தங்க நாணயமா? ரூ.3.5 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கம் பறிமுதல்.. இடைத்தேர்தல் தொகுதியில் பரபரப்பு!

அரசியல் களத்தில் கிளம்பியுள்ள புதிய புயல்:

தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ள இந்த வேளையில், தவெக எடுத்துள்ள இந்த அதிரடி சட்ட நடவடிக்கை தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் மேடைகளில் தனிப்பட்ட விமர்சனங்களும் உருவக் கேலிகளும் தவிர்க்கப்பட வேண்டும் என்ற குரல்கள் வலுத்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை இந்த புகாரின் மீது என்ன மாதிரியான நடவடிக்கைகளைச் மேற்கொள்ளப்போகிறது என்பதை அனைத்து அரசியல் கட்சிகளும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

Follow Us