AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விஜய்க்கு அரசியல் எதற்கு… உங்களது உண்மை முகம் என்ன? தவெக பெண் நிர்வாகி காரசாரமான கேள்வி!

Tvk Executive Ranjana Nachiyar: பெண்களின் மரியாதையை குலைக்கும் வகையில் பேசும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு அரசியல் எதற்கு அவரது உண்மை முகம் என்ன என்று அந்தக் கட்சியின் நிர்வாகி ரஞ்சனா நாச்சியார் பரபரப்பு அறிக்கையை வெளியிட்டு உள்ளார்.

விஜய்க்கு அரசியல் எதற்கு… உங்களது உண்மை முகம் என்ன? தவெக பெண் நிர்வாகி காரசாரமான கேள்வி!
விஜய்க்கு அரசியல் எதற்கு
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 09 Mar 2026 08:42 AM IST

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில், கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று பேசியிருந்தார். அப்போது, அண்மை காலமாக சில விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. அதைப்பற்றி தொண்டர்களாகிய நீங்கள் கவலைப்படுகிறீர்கள். அதை பார்க்கும்போது, எனக்கு கவலையாகிறது. எனவே, நீங்கள் அதைப்பற்றி கவலைப்பட தேவையில்லை. அது வொர்த் இல்லை. நான் பார்த்துக் கொள்கிறேன் என்றவாறு பேசி இருந்தார். இதனிடையே, அண்மையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் விஜய், ஒரு பிரபல நடிகையுடன் பங்கேற்று இருந்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் கூறிய அந்த வார்த்தை தற்போது பேசும் பொருளாகியுள்ளது. இந்த நிலையில், விஜய்யின் அத்தகைய பேச்சை கண்டித்து அவரது கட்சியின் நிர்வாகியான ரஞ்சனா நாச்சியார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

விஜய்க்கு எது வொர்த் இல்லை

அந்த அறிக்கையில் அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் கூறும் வேளையில், முக்கியமாக எங்கள் தலைவர் விஜய்க்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். விஜய்க்கும், அவரது மனைவிக்கும் இடையே உள்ள பிரச்சனை குறித்து வொர்த் இல்லை என்று தெரிவித்திருந்தார். இதில், எது வொர்த் இல்லை தலைவா… உங்கள் மனைவியா அல்லது உங்கள் திருமண வாழ்க்கையா. உங்கள் மனைவியை வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அப்படி இருக்கும் நிலையில், வீட்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் தருகிறேன் என்று கூறுவது கடுமையான முரண்பாடாக தெரியவில்லையா.

மேலும் படிக்க: அதிமுக – பாஜக கூட்டணியில் இணையும் தவெக?.. திமுகவின் மெகா கூட்டணியால் மாறும் எதிர்கட்சிகளின் வியூகம்..

விஜய்க்கு இந்த அரசியல் எதற்கு… உங்களது உண்மை முகம் என்ன

பெண்களின் உயர்வு குறித்து பேசும் நீங்கள் உங்களது வார்த்தையில் பெண்களின் மரியாதையை காக்கும் மொழி கூட இல்லையே. அப்படி என்றால் இந்த அரசியல் எதற்காக. உங்களது உண்மை முகம் என்ன. உங்களை உண்மையான தெய்வமாக கருதி வாழும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எனது தலைவன் 7 பொண்டாட்டி கட்டுவான். அதில் என்ன தவறு என்று பதிவிடுகின்றனர். நான் உங்களுக்கு மனைவியாக வருகிறேன் உங்களது மனைவியை விவாகரத்து செய்யுங்கள் என்ற பதிவுகளும் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையை உருவாக்கியது யார். தலைவன் எவ்வழியோ, தொண்டனும் அவ்வழியே என்ற பழமொழியை உங்களுக்கு தெரியாதா.

பெற்ற குழந்தைக்கு தகப்பனாக இருங்கள் பின்னர் தாய்மாமனாக இருக்கலாம்

திருமணமாகி மனைவி இருக்கும் நிலையில், மற்றொரு நடிகையுடன் பொதுவெளியில் வருவதை பார்த்து உங்களது ரசிகர்களும் இப்படி வாழலாம் என்ற எண்ணம் அவர்கள் மனதில் விதைக்கப்படும் அல்லவா. பிறக்கும் குழந்தைக்கு தாய் மாமன் சீர் கொடுப்பதாக கூறியிருக்கும் நீங்கள், அந்த குழந்தைக்கு தாய் மாமனாக இருப்பதற்கு முன்பு பெற்ற குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பது மிகவும் முக்கியமாகும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: கடலோர மாவட்டங்களில் மழை எச்சரிக்கை.. இயல்பை விட அதிகரிக்கும் வெப்பம்.. வானிலை நிலவரம் இதோ..

Follow Us