ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்.. ஹேமராஜ் குற்றவாளி.. நீதிமன்றம் அதிரடி!

Tirupattur Crime News : 2025 பிப்ரவரி 6ஆம் தேதி கர்ப்பிணிக்கு ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளி விட்ட வழக்கில் ஹேமராஜ் குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹேமந்த்ராஜுக்கான தண்டனை விவரங்கள் 2025 ஜூலை 14ஆம் தேதி திங்கள்கிழமை அறிவிக்கப்படும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்.. ஹேமராஜ் குற்றவாளி..  நீதிமன்றம் அதிரடி!

குற்றவாளி ஹேமராஜ்

Updated On: 

11 Jul 2025 17:30 PM

 IST

திருப்பத்தூர், ஜூலை 11 : ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய நபர் குற்றவாளி என திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஹேமராஜ் என்பவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட நிலையில், இவருக்கான தண்டனை விவரங்கள் 2025 ஜூலை 14ஆம் தேதி திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த சம்பவம் 2025 பிப்ரவரி மாதம் நடந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மாநிலம் சித்தூர் பகுதியைச் சேர்ந்தவர் ரேவதி. இவர் 2025 பிப்ரவரி மாதம் கர்ப்பமாக இருந்துள்ளார். மேலும், திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வருகிறார். தனது சொந்த ஊரான சித்தூருக்கு செல்வதற்காக 2025 பிப்ரவரி மாதம் திருப்பூர் ரயில் நிலையத்தில் இருந்து ரயில் ஏரியுள்ளார். கோயம்புத்தூர் வழியாக திருப்பதி செல்லும் இன்டர் சிட்டி விரைவு ரயிலில் கர்ப்பணி பயணம் செய்துள்ளார்.

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு நடந்த கொடூரம்

அப்போது, ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, கழிவறைக்கு சென்றிருக்கிறார். அப்போது, கழிவறை அருகே, கர்ப்பிணிக்கு இளைஞர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால், அந்த பெண் கத்தி கூச்சலிட்டார். இதனை அடுத்து ஆத்திரமடைந்த அந்த நபர கர்ப்பிணியை வேலூர் மாவட்டம் கே.வி குப்பம் அருகே ரயில் வந்து கொண்டிருந்தபோது ரயிலிலிருந்து கீழே தள்ளிவிட்டுள்ளார். ரயில் காட்பாடி நிலையம் வந்ததும் அந்த இளைஞர் இறங்கிச் சென்றுள்ளார்.

ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டதில், கர்ப்பிணிக்கு கை கால் முறிவு ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுருக்கிறது. இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், கர்ப்பிணி மீட்கப்பட்டு, வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Also Read : கடலூர் பள்ளி வேன் -ரயில் விபத்து: கேட் கீப்பர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

ஹேமராஜ் குற்றவாளி

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணையும் நடைபெற்றது. அப்போது, கர்ப்பிணியிடம் ரயில்களில் குற்றங்களை செய்யும் பதிவேடு குற்றவாளிகளின் புகைப்படங்களை காண்பித்து ரயில்வே போலீசார் விசாரித்த போது கர்ப்பிணிப் பெண் ஹேமராஜின் புகைப் படத்தை அடையாளம் கண்டு கூறி இருக்கிறார்.

இதனை அடுத்து ஹேமராஜை கேவி குப்பம் செல்லும் வழியில் ரயில்வே போலிசார் கைது செய்தனர். மேலும் இவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதன் வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Also Read : அஜித்குமார் காவல் மரணம்: நிகிதா புகார் பொய்யா? சிபிஐ விசாரணையில் புதிய குழப்பம்

பல கட்ட விசாரணைக்கு பிறகு, திருப்பத்தூர் நீதிமன்றம் 2025 ஜூலை 11ஆம் தேதியான இன்று தீர்ப்பளித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மீனா குமாரி ஹேமராஜை குற்றவாளி என தீர்ப்பளித்து அவரது தண்டனை விவரம் 2025 ஜூலை 14ஆம் தேதி அறிவிக்கப்படும் என கூறினார். ஹேமராஜுக்கு இரண்டு ஆண்டுகள் முதல் சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us
Related Stories
எரிவாயு தட்டுப்பாடு.. மத்திய மாநில அரசுகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்..
ஈரான் போர் தாக்கம்.. எரிவாயு தட்டுப்பாடு குறித்து பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ஓ. பன்னீர் செல்வம் மனநிலையில் திடீர் மாற்றம்… வீட்டில் மீண்டும் குடியேறிய ஜெயலலிதா புகைப்படம்!
பசுமை காடுகளுக்கு மத்தியில் “குட்டி குற்றாலம்”.. பட்ஜெட் ட்ரிப்புக்கு ஏற்ற பக்காவான இடம்!
மதுபோதையில் கொடூர தாக்குதல்.. ஆத்திரத்தில் கத்தியை எடுத்த தாய்.. ரத்தம் வெள்ளத்தில் சுருண்டு விழுந்த மகன்.. அடுத்து நடந்த விபரீதம்!
Seeman Tamil Nadu Election: தனித்து களம் காணும் நாதக… காங்கிரஸ் கோட்டையில் களமிறங்கும் சீமான்.. வெற்றியை வசமாக்குவாரா!
ஈரான் - இஸ்ரேல் போர் பரபரப்பு: 4 வாரங்களுக்கு டிவி செய்தி சேனல்களின் TRP வெளியீடு நிறுத்தம்
ஷோலே படக் காட்சி போல சம்பவம்… காதலனை விடுவிக்க மொபைல் டவரில் ஏறிய இளம்பெண்!
போர் விமான விபத்து.. இந்திய விமானப்படை விமானி வீரமரணம்..
நவீனகால திருமணங்கள்.. பழமை மாறாத சிந்தனை..