இந்தியாவில், ரயில்வே நாட்டின் உயிர்நாடியாக கருதப்படுகிறது; தினமும் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செய்கின்றனர். நாட்டில் சுமார் 8500 ரயில் நிலையங்கள் உள்ளன. ஆனால், ஒரு ரயில் நிலையத்தில் செல்ல பாஸ்போர்ட் மற்றும் வீசா அவசியம் என்பதை பலர் அறியாமல் இருக்கலாம். அமிர்தசரில் உள்ள அட்டாரி ஷ்யாம் சிங் ரயில் நிலையம் இதற்கு ஒரே எடுத்துக்காட்டு. இந்தியா பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள இந்த நிலையம் லாகூருடன் இணைக்கப்பட்டுள்ளது.