Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

முடி வெட்டலையா? கேள்வி கேட்ட பள்ளி முதல்வர்.. ஆத்திரத்தில் கொலை செய்த மாணவர்கள்!

Haryana Crime News : ஹரியானா மாநிலத்தில் பள்ளி முதல்வர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைமுடியை வெட்ட சொல்லி பள்ளி முதல்வர் அறிவுறுத்தியதால், ஆத்திரத்தில் 11, 12ஆம் வகுப்பைச் சேர்ந்த இரண்டு மாணவர்கள், அவரை கத்தியால் பலமுறை குத்திக் கொலை செய்துள்ளனர்.

முடி வெட்டலையா? கேள்வி கேட்ட பள்ளி முதல்வர்.. ஆத்திரத்தில் கொலை செய்த மாணவர்கள்!
மாதிரிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 10 Jul 2025 18:07 PM

ஹரியானா, ஜூலை 10 : ஹரியானா மாநிலத்தில்  மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய முதல்வர், கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தலைமுடியை வெட்டவும், ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும் என பள்ளி முதல்வர் அறிவுரை வழங்கியதை அடுத்து, அவரை இரண்டு மாணவர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது. ஹரியானாவில் ஹிசார் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் முதல்வராக ஜக்பீர் சிங் (50) உள்ளார். இவர் 2025 ஜூலை 10ஆம் தேதியான இன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றிருக்கிறார். அப்போது, பள்ளிக்கு ஏராளமான மாணவர்கள் வந்துள்ளனர். அப்போது, இரண்டு மாணவர்களை பள்ளி முதல்வர் ஜக்பீர் சிங் மறித்து தலைமுடியை ஏன் வெட்டவில்லை என கேள்வி கேட்டிருக்கிறார். அதோடு, பள்ளிக்கு வரும்போது ஒழுக்கத்துடன் வர வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருக்கிறார்.

ஹேர்கட் செய்து கொள்ளவும், சரியாக உடை அணியவும், பள்ளியின் விதிகள் மற்றும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தியதாக தெரிகிறது.  இதனால், ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் பள்ளி முதல்வர் ஜக்பீர் சிங்கை  மறைத்து வைத்திருந்த கத்தியால்  பலமுறை குத்தி உள்ளனர்.  மணவர்கள் ஜக்பர் சிங்கை குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜக்பர் சிங்கை, பள்ளி ஊழியர்கள் மீட்டு அருகில்  இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

Also Read : இன்ஸ்டாகிராமில் பெண்ணுக்கு ஆபாச மெசேஜ்… சைபர் குற்றங்களிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

பள்ளி முதல்வர் கொன்ற மாணவர்கள்


அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி முதல்வரை கொலை செய்த இரண்டு பேர் 11,12ஆம் வகுப்பு மாணவர்கள் என தெரியவந்துள்ளது.

பள்ளி முதல்வர் ஜக்பீர் சிங் அறிவுறுத்தியதை அடுத்து, ஆத்திரத்தில் கொலை செய்தது தெரியவந்தது. மாணவர்களை அடையாளம் காணும் பணிகள் நடந்து வருவதாக ஹிசார் போலீசார் கூறியுள்ளனர். ஹிசார் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும்,  ஜக்பீர் சிங்கின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Also Read : மாதவிடாய் யாருக்கு? மாணவிகளின் ஆடைகளை கழற்றி சோதனை.. கைதான பள்ளி முதல்வர், ஊழியர்!

இதுகுறித்து ஹன்சி எஸ்பி அமித் யஷ்வர்தன் கூறுகையில், “இந்த விஷயத்தில் இரண்டு மாணவர்களின் பெயர்கள் தெரியவந்துள்ளது. அவர்களைப் பிடிக்க எங்கள் குழு முயற்சி செய்து வருகிறது. சம்பவ இடத்தில் ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை செய்த பிறகு அனைத்து விவரங்களும் உறுதி செய்யப்படும்” என கூறினார்.