மத்திய பிரதேசத்தின் இந்தோர் நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. ஒரு தொழிலதிபரின் வீட்டிற்குள் பலவந்தமாக நுழைந்து, தங்க நகைகள் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், ஐந்து போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் ஏப்ரல் 1ஆம் தேதி இரவு நடந்ததாக கூறப்படுகிறது.