இந்தியாவில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வெப்ப அலைகள் மட்டுமல்ல, ஈரப்பதத்துடன் கூடிய வெப்பம் மிகப்பெரிய அபாயமாக மாறிவருகிறது என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம் ஏப்ரல் முதல் ஜூன் வரை கிழக்கு, மத்திய மற்றும் தென் இந்தியாவில் வழக்கத்தை விட அதிக வெப்ப அலை நாட்கள் இருக்கும் என தெரிவித்துள்ளது.