“நீட் மட்டும் தான் உலகமா? ஸ்ட்ரெஸ் வேண்டாம்” மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் அட்வைஸ்
TVK Vijay : சென்னை மாமல்லபுரத்தில் நடக்கும் மாணவர்களுக்கான விருது வழங்கும் விழாவில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியுள்ளார். அதில், நீட் தேர்வு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து விஜய் பேசியுள்ளார். மேலும், சாதி மதத்தையும் தூரம் ஒதுக்குவது நல்லது என்றும் பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சிக்கின்றனர் என்றும் விஜய் கூறியுள்ளார்.

சென்னை, மே 30 : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் (TVK Vijay) சார்பில் 10,11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விருது (tvk student award function) வழங்கும் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் 10,11ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு விஜய் பரிசுகளை வழங்கி வருகிறார். முன்னதாக, மாணவர்களுக்கு அரங்கில் அமர்ந்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார் விஜய். இதற்கு முன்னதாக, நிகழ்ச்சியில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மாணவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளார். அப்போது பேசிய அவர், ” அனைவருக்கும் வணக்கம். யங் லீடர்ஸ், பேரட்ஸ் அனைவரும் எப்படி இருக்கிறீர்கள். உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். அனைத்து மாணவர்களுக்கு எனது வாழ்த்துகள்.
நீட் மட்டும் தான் உலகமா?
படிப்பில் சாதனை தான் முக்கியம். அதற்காக ஒரே படிப்பில் மட்டும் சாதனை படைக்க வேண்டும் என்ற முக்கியம் இல்ல. ஒரே விஷயத்தை பற்றி மீண்டும் மீண்டும் யோசித்து மன சோர்வு அடையாதீர்கள். அவ்வளவு ஸ்ட்ரெஸ் ஆக வேண்டிய அவசியம் இல்லை.




படிக்கும்போது ஸ்ட்ரெஸ் ஆக வேண்டிய அவசியம் இல்லை. நீட் மட்டும் தான் உலகமா. நீட் மட்டுமே உலகம் இல்லை. நீட்டை தாண்டி பல விஷயங்கள் உள்ளன.ஜனநாயக முறைப்படி இருங்கள். ஜனநாயகம் இருந்தால் எல்லாருக்கும் எல்லாமும் சமமாக கிடைக்கும். அதற்கு முதற்படியாக நீங்கள் ஜனநாயக கடமையை முறையாக செய்யுங்கள்.
நல்லவர்கள், நம்பிக்கையானவர்கள், இதுவரை ஊழலே செய்யாதவர்களை தேர்ந்தெடுத்து ஜனநாயக கடமையை செய்யுங்கள். இது உங்கள் பெற்றோரிடமும் சொல்லுங்கள். அடுத்த வருஷம் வண்டி வண்டியாக பணத்தை கொண்டு வந்து கொட்டுவார்கள். அது உங்களிடம் இருந்து கொள்ளையடித்த பணம் தான். என்ன பண்ணப்போறீங்க?
என்ன பண்ணனும்னு உங்களுக்கே தெரியும். பெற்றோரிடம் முக்கிய கோரிக்கை ஒன்று வைக்கிறேன். உங்களின் குழந்தைகளின் விஷயத்தில் எதையும் கட்டாயப்படுத்தாதீர்கள். அழுத்தத்திற்கு உள்ளாக்காதீர்கள். அவர்களுக்கு என்ன பிடித்திருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதன்படி வழிநடத்துங்கள்” என்று கூறினார்.
மாணவர்களுக்கு தவெக தலைவர் விஜய் அட்வைஸ்
Full Speech ❤️ #VIJAYHonorsStudents pic.twitter.com/iEkihW20VV
— TVK IT Wing (@Actor_Vijay) May 30, 2025
தொடர்ந்து பேசிய அவர், ”சாதி மதத்தை வைத்து பிரிவினை வளர்க்கும் சிந்தனை பக்கம் போய்விடாதீர்கள். உங்கள் எண்ணத்தை பாதிக்க அனுமதிக்காதீர்கள். விவசாயிகள் சாதி, மதம் பார்த்து பொருளை விளைவிப்பதில்லை. தொழிலாளர்கள் சாதி, மதம் பார்த்து உற்பத்தி செய்வதில்லை.
வெயில், மழையில் எல்லாம் சாதி மதமா இருக்கிறது. போதைப் பொருட்களை அறவே ஒதுக்கியது போல், சாதி மதத்தையும் தூரம் ஒதுக்குவது நல்லது. அண்மையில், பெரியாருக்கே சாதி சாயம் பூச முயற்சிக்கின்றனர். மத்திய சிவில் சிர்விஸ் தேர்விலும் கூட, சாதி சாயம் பூசுகின்ற மாதிரி ஒரு கேள்வியை கேட்டுள்ளனர். இதனை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.