AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தவெகவுடன் பாஜக கூட்டணி அமைத்தால்.. அது எங்களுக்கு… உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய வார்த்தை!

NDA- TVK Alliance Amit Shah Explains: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகத்தை இணைப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டதா என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். இதில், அவர் என்ன தெரிவித்துள்ளார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தவெகவுடன் பாஜக கூட்டணி அமைத்தால்.. அது எங்களுக்கு… உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய வார்த்தை!
பாஜக-தவெக கூட்டணி தொடர்பாக அமித் ஷா பரபரப்பு விளக்கம்
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 28 Mar 2026 09:26 AM IST

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், பாஜக, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளன. இதில், தமிழக வெற்றிக் கழகத்தை கூட்டணியில் இணைக்க வேண்டும் என்று பாஜக தலைமை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அதில், தமிழகத்தில் அதிமுக எங்களின் முதன்மை கூட்டணி கட்சியாக இருந்து வருகிறது. அந்த கட்சியை ” பெரிய அண்ணன்” என பாஜக கருதி வருகிறது. எனவே, தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது தொடர்பாக எந்த முயற்சிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னெடுக்கவில்லை. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், எங்கள் கூட்டணிக்கு வந்தால் அது எங்கள் வாக்கு வங்கியில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி விடும் என்று கூறினார்.

தவெகவுடன் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை

தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளும் திமுக அரசை வீழ்த்துவதற்காக ஒத்த கருத்துடைய கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரலாம் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் தெரிவித்திருந்தனர். இதில், அரசியல் களத்துக்கு புது வரவான தமிழக வெற்றிக் கழகத்தை தங்கள் கூட்டணியில் இணைப்பதற்கான முயற்சியில் பாஜக தலைமை ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. அத்துடன், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தவெக தலைவர் விஜய், ஆதவ் அர்ஜுனா ஆகியோர டெல்லி சென்றிருந்தனர். அங்கு, பாஜக- தவெக கூட்டணி தொடர்பாக தனியார் ஹோட்டலில் பாஜக மூத்த தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

மேலும் படிக்க: திமுக கூட்டணி தொகுதி பட்டியல் வெளியாவதில் தாமதம்.. காங்., தேமுதிக விருப்ப இடங்களை கேட்டு பிடிவாதம்!!

கூட்டணி அமைக்கலாம் என தவெக மா.செக்கள் கருத்து

இதைத் தொடர்ந்து, தமிழகம் திரும்பிய தமிழக வெற்றி கழகத்தின் தலைவர்கள் விஜய், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மூலமாக கட்சியின் மாவட்ட செயலாளர்களுடன் காணொலி வாயிலாக தவெக கூட்டணி அமைப்பது தொடர்பாக கருத்து கேட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. அதில், 120 மாவட்ட செயலாளர்களில் சுமார் 98 மாவட்ட செயலாளர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியுடன், கூட்டணி அமைக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்ததாக கூறப்பட்டது. இதனால், தேசிய ஜனநாயக கூட்டணியில், விஜய் இணைந்து விடுவார் என்று செய்திகள் வெளியாகி இருந்தன.

கூட்டணி குறித்த செய்திக்கு முற்றுப்புள்ளி

இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதற்கு தயாராக இருந்த விஜய், கட்சியின் தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் விஜயின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தன. இதைத் தொடர்ந்து, தேசிய ஜனநாயக கூட்டணியுடன், தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைப்பதாக வெளியான தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு மாறானவை என்று விஜய் திட்டவட்டமாக அறிவித்திருந்தார். இந்த நிலையில், தேஜ கூட்டணி-தவெக கூட்டணி தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் படிக்க: தவெகவுடன் புதிய தமிழகம் கூட்டணி?.. “12 தொகுதிகளில் வெற்றி உறுதி”.. கிருஷ்ணசாமி அதிரடி!!

Follow Us