சீனாவின் ஜிலின் மாகாணத்தில் நடந்த இந்த சம்பவம் உலகையே நெகிழ வைத்துள்ளது. சட்டவிரோத நாய் இறைச்சி வியாபாரத்திற்காக ஏழு வளர்ப்பு நாய்கள் கடத்தப்பட்டன. இந்த நிலையில் லாரியில் இருந்து தப்பித்த அந்த நாய்கள், சுமார் 17 கிலோமீட்டர் தூரத்தை இரண்டு நாட்களில் ஒன்றாகவே கடந்து, தங்கள் வீடு திரும்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.