AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

வரன் தேடும் தமிழக மக்களுக்கு நிம்மதி செய்தி.. மேட்ரிமோனி தளங்களில் ஆதார் சரிபார்ப்புக்கு தமிழக அரசு அனுமதி!!

Tamil Nadu Matrimony Aadhaar Verification: திருமண வரன் தேடும் மேட்ரிமோனி இணையதளங்களில் நிகழும் போலி கணக்குகள், ஆள்மாறாட்டம் மற்றும் பண மோசடிகளைத் தடுக்கும் வகையில் பயனாளர்களின் விருப்பத்தின் பேரில் ஆதார் சரிபார்ப்பு செய்து கொள்ளத் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பாகச் சமூக நலத்துறை மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன.

வரன் தேடும் தமிழக மக்களுக்கு நிம்மதி செய்தி.. மேட்ரிமோனி தளங்களில் ஆதார் சரிபார்ப்புக்கு தமிழக அரசு அனுமதி!!
மாதிரிப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 24 Sep 2026 13:22 PM IST

சென்னை, செப்.24: இன்றைய டிஜிட்டல் காலகட்டத்தில் திருமண வரன் தேடுவதற்கு மேட்ரிமோனி இணையதளங்களை நாடுவோரின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளது. இருப்பினும், இத்தளங்களில் போலி கணக்குகளை உருவாக்கிப் பெண்களிடமும் குடும்பத்தினரிடமும் ஆள்மாறாட்டம் செய்து பண மோசடிகளில் ஈடுபடும் சம்பவங்களும் தொடர்கதையாகி வந்தன. இத்தகைய திருமண மோசட முற்றுப்புள்ளி வைக்கவும், பயனாளர்களின் தகவல்களை நம்பகத்தன்மையுடன் உறுதிப்படுத்தவும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மேட்ரிமோனி தளங்களில் பயனாளர்களின் விருப்பத்தின் அடிப்படையில் ஆதார் சரிபார்ப்பு செய்து கொள்ளத் தமிழக அரசு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது. தமிழக அரசின் சமூக நலத்துறை இதற்கான முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

இதையும் படிக்க: “ரூ.10,000 வரை உயர்ந்த சம்பளம்!”.. டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடித்தது யோகம்.. வெளியான அதிரடி அறிவிப்பு!

ஆதார் சரிபார்ப்பின் நன்மைகளும் நடைமுறைகளும்:

பொதுவாக மேட்ரிமோனி தளங்களில் புகைப்படங்கள் மற்றும் அடிப்படை விவரங்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கும் சூழலில், ஆதார் எண்ணை இணைத்துச் சரிபார்ப்பதன் மூலம் கணக்கின் உண்மைத்தன்மை உடனடியாக உறுதி செய்யப்படும். இருப்பினும், இந்த ஆதார் சரிபார்ப்பு நடைமுறை முழுக்க முழுக்கப் பயனாளர்களின் சொந்த விருப்பத்திற்கு உட்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனாளரின் முழு ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே இச்சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும். மேலும், ஆதார் எண்ணை வழங்க விரும்பாதவர்களுக்கோ அல்லது இயலாதவர்களுக்கோ இச்சேவை மறுக்கப்படக்கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது.

மாற்றுச் சான்றிதழ்கள் மற்றும் எளிதாக்கப்பட்ட வழிமுறைகள்:

ஆதார் அட்டை இல்லாதவர்கள் அல்லது அதை வழங்க விரும்பாதவர்கள் தங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த ஓட்டுநர் உரிமம், கடவுச்சீட்டு அல்லது பேன் கார்டு போன்ற பிற அரசு அங்கீகாரம் பெற்ற ஆவணங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளர்கள் பலவிதமான ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் சிரமம் குறைக்கப்பட்டு, மேட்ரிமோனி கணக்குகளை எளிதாகவும் பாதுகாப்பாகவும் சரிபார்க்கும் வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

இதையும் படிக்க: தவெக அமைச்சர்கள் வங்கி கணக்கை ரகசியமாக கண்காணிக்கும் முதல்வர் விஜய்.. என்ன காரணம்.. என். ஆனந்த் விளக்கம்!

மோசடிகளுக்கு முற்றுப்புள்ளியும் பாதுகாப்பான எதிர்காலமும்:

மேட்ரிமோனி தளங்களில் முதற்கட்டமாக Matrimony.com போன்ற பிரபல தளங்களில் பயனாளர்களின் அடையாளத்தைச் சரிபார்க்கச் சமூக நலத்துறை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. இதன் மூலம் திருமண வரன் தேடும் இளம்பெண்கள், இளைஞர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் போலி சுயவிவரங்களால் ஏமாறுவது தடுக்கப்படும். இணையவழித் திருமணச் சந்தையில் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் நோக்கில் தமிழக அரசு எடுத்துள்ள இந்த முன்னோடி நடவடிக்கை பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Follow Us