தீய சக்தியும் – தீஞ்சு போன சக்தியும்.. திமுக அதிமுகவை கடுமையாக சாடிய முதல்வர் விஜய்..
ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத ஆட்சியை நான் கொடுப்பேன். ஒரே நாளில் அது நடக்காது. ஆனால் ஒரு நாள் அதை நடக்க வைப்பேன். எனக்கு இப்போது எந்த வேலையும் கிடையாது — உங்களுக்கு நல்லது செய்வதைத் தவிர என முதல்வர் விஜய் பேசியுள்ளார்.
கோப்பு புகைப்படம்
திருச்சி, ஜூன் 1, 2026: திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “கடைசி ஒரு மாதமாக நடந்த சில விஷயங்களை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கட்டணமில்லா மின்சாரம் அறிவித்தோம். அதில் முதல் 100 யூனிட் இலவசம் என்பது திமுக அறிவித்தது கிடையாது. அது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அறிமுகப்படுத்தியது.
ஒரு மாத காலத்தில் என்ன செய்ய முடியுமோ அதை செய்தேன்:
Follow Us