AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அடுத்த 3 நாட்கள்.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!

Tamil Nadu Weather Update : தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, நீலகிரி, கோவை, தேனி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 3  நாட்கள்.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. சென்னையில் எப்படி? வானிலை அப்டேட்!
மழைImage Source: PTI
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 20 Jul 2025 15:05 PM IST

சென்னை, ஜூலை 20 :  தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக் கூடும் என வானிலை மையம் (Tamil Nadu weather Update)  தெரிவித்துள்ளது. சென்னையில் ஒரு சில இடங்களில் 2025 ஜூலை 20,21ஆம் தேதிகளில் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பரவராக மழை (Chennai Rains) பெய்து வருகிறது. குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையொட்டிய மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள சுற்றுலா தளங்களும் மூடப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழகத்தில்  நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த நிலையில், அடுத்த சில தினங்களுக்கான வானிலை நிலவரத்தை பார்ப்போம்.  அதன்படி, தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக, தமிழக்ததில் அடுத்த ஐந்து நாட்களுக்கு ஒருசில இடங்களில் மிதமான மழையும், கனமழையும் பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூலை 20ஆம் தேதியான இன்று நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தேனி, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Also Read : 3-வது முறை நிரம்பிய மேட்டூர் அணை: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கொட்டி தீர்க்கப்போகும் கனமழை


2025 ஜூலை 21ஆம் தேதி நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஜூலை 22ஆம் தேதி நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Also Read : 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. பிற மாவட்டங்களில் எப்படி?

மேலும், 2025 ஜூலை 23ஆம் தேதி முதல் 26ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, 2025 ஜூலை 20,21ஆம் தேதிகளில் நகரின் ஒருசில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us