3-வது முறை நிரம்பிய மேட்டூர் அணை: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
Mettur Dam Reaches Full Capacity: மேட்டூர் அணை 120 அடி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் மக்கள் நலனுக்குப் பெரும் ஆதரவாகும். காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் ஜூலை 2025: மேட்டூர் அணை (Mettur Dam) இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக 120 அடி முழு கொள்ளளவை எட்டியுள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 31,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், வெளியேற்றப்படும் நீர் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்ட விவசாயத்திற்கு (Delta Farmers) இதனால் பாசன நம்பிக்கை உருவாகியுள்ளது. அணையில் நீர் இருப்பு தற்போது 93.47 டி.எம்.சி.யாக உள்ளது. வெள்ள அபாயத்திற்காக கரையோர மக்களுக்கு எச்சரிக்கை (Warning to coastal residents) விடுக்கப்பட்டுள்ளது. காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
3-வது முறை நிரம்பிய மேட்டூர் அணை
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை, 2025-ம் ஆண்டில் மூன்றாவது முறையாக தனது முழு கொள்ளளையான 120 அடியை 20 ஜூலை 2025 இன்று எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழையால் கர்நாடகத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் விட்டு விட்டு பெய்து வரும் கனமழை காரணமாக, கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பிய நிலையில், பாதுகாப்பு காரணமாக தமிழகத்துக்கு உபரிநீர் திறக்கப்பட்டது. இதனால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
Also Read: 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. பிற மாவட்டங்களில் எப்படி?




19 ஜூலை 2025 நேற்று மாலை அணைக்கு வினாடிக்கு 28,784 கனஅடி நீர் வரத்துடன் இருந்த நிலையில், 20 ஜூலை 2025இன்று காலை நீர்வரத்து 31,000 கனஅடியாக உயர்ந்தது. இதைத் தொடர்ந்து, அணையில் இருந்து டெல்டா மற்றும் கால்வாய் பகுதிகளுக்கான பாசன தேவைக்காக வெளியேற்றப்படும் நீரின் அளவும் வினாடிக்கு 22,500 கனஅடியில் இருந்து 31,000 கனஅடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் தற்போதைய நீர் இருப்பு 93.47 டி.எம்.சி ஆகும்.
இந்த நிலையில், அணை நிரம்பியிருப்பது தமிழக விவசாயிகளுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திருச்சி, தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள சுமார் 16.40 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு பாசனத்துக்காக நீர் கிடைக்கும் என்பதாலேயே, குறுவை, சம்பா, தாளடி என மூன்று பயிர் பருவங்களுக்கான திட்டம் நம்பிக்கையுடன் தொடரும்.
Also Read: அடுத்த 7 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?
2025 ஜூன் 12-ஆம் தேதி நீர் திறப்பு
மேட்டூர் அணை 1924-ம் ஆண்டு கட்டத் தொடங்கப்பட்டு 1934-ம் ஆண்டு நிறைவடைந்தது. இப்போது வரை, 2025 ஜூன் 12-ஆம் தேதியை நீர் திறப்பு நாளாக அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் அந்த நாளில் 90 அடி மேலாக நீர் மட்டம் இருந்தால் மட்டுமே திறக்கப்படுவதுண்டு. இதுவரை 19 முறைகள் மட்டுமே குறித்த நாளில் நீர் திறக்கப்பட்டுள்ளது, 11 முறைகள் முன்கூட்டியே மற்றும் 61 முறைகள் தாமதமாக நீர் திறக்கப்பட்டுள்ளது.
காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணையின் நிரம்பிய நிலை, தமிழகத்தின் நீர் மேலாண்மை, விவசாயம் மற்றும் குடிநீர் தேவைகளுக்குத் தீர்வாக அமைவதோடு, மக்களின் வாழ்வாதாரத்தையும் உறுதி செய்கிறது. தற்போது, பாதுகாப்பு நடவடிக்கையாக, 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் திறக்கப்படுவதால் காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.