2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. பிற மாவட்டங்களில் எப்படி?
Tamil Nadu Weather Alert: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஜூலை 20, 2025 தேதியான இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.

வானிலை நிலவரம், ஜூலை 20, 2025: தமிழகத்தில் கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களில் நல்ல மழை பதிவு இருந்து வருகிறது. அந்த வகையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை மாவட்டம் கொரட்டூரில் 10 செ.மீ அளவு மழை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து துரைப்பாக்கம், கண்ணகி நகர், ஈஞ்சம்பாக்கம், உள்ளிட பகுதிகளில் எட்டு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் இரவு நேரங்களில் நகரின் அனேக பகுதிகளில் மிதமான முதல் கன மழை பெய்து வருகிறது. மேலும் தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது அது போல் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக ஜூலை 20, 2025 தேதியான இன்று நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடரும் கனமழை:
அதேபோல தேனி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூலை 21 2025 தேதியான நாளை நீலகிரி, தென்காசி, தேனி, திருநெல்வேலி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: பிரசவமா? பயத்தில் மர்மமான இளம்பெண்.. அடுத்து என்ன? ஈரோட்டில் நடந்த சம்பவம்!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான முதல் கனமழை முதல் இரவு நேரங்களில் பதிவாகி வருகிறது. இதனால் அதிகபட்ச வெப்பநிலை என்பது 34 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கிறது.
சென்னையில் கனமழை தொடரும் – பிரதீப் ஜான்:
What a spell. Almost century in Korrattur in North Chennai and down in south Chennai too in Okkaiyam Thoraipakkam, Injabambakkam, Madipakkam, Velacherry all got heavy rains. A superb day. All the rainfall fell in just 1 hour of intense rains.
This is not over. More rains… pic.twitter.com/fedzY5biCG
— Tamil Nadu Weatherman (@praddy06) July 18, 2025
கடந்த 24 மணி நேரத்தில் சென்னையில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பதிவான நிலையில் இரவு முதல் நகரின் அனேக பகுதிகளில் விட்டு விட்டு அவ்வப்போது மிதமான மழை பதிவாகி வந்தது. அதேபோல் இந்த மழை என்பது அடுத்து ஒரு சில தினங்களுக்கும் தொடரும் என தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.