AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பொளக்கும் வெயில்.. 4 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. எங்கெல்லாம் மழை இருக்கும்?

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொளக்கும் வெயில்.. 4 டிகிரி வரை அதிகரிக்கும் வெப்பநிலை.. எங்கெல்லாம் மழை இருக்கும்?
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 09 Sep 2026 06:25 AM IST

செப்டம்பர் 9, 2026: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் தொடங்கியிருந்தாலும், தற்போது வரை பெரிய அளவில் மழை எங்கும் பதிவாகவில்லை. மாறாக, தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கக்கூடிய சூழல் நிலவி வரும் நிலையில், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

100 டிகிரி பாரன்ஹீட்டை கடந்து பதிவாகும் வெப்பநிலை:

இந்த சூழலில், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 40.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தொடர்ந்து திருச்சியில் 40.1, தஞ்சாவூரில் 39, பாளையங்கோட்டையில் 39.4, மதுரையில் 38, கரூரில் 38.7, ஈரோட்டில் 39.6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 37 டிகிரி செல்சியஸும், நுங்கம்பாக்கத்தில் 35.6 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

இதற்கிடையே, அடுத்த சில தினங்களிலும் தமிழகத்தில் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரையில், வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: எனது செய்கை உள்நோக்கம் கொண்டதில்லை – முதல்வர் விஜய் விளக்கம்

செப்டம்பர் 9: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 10: மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், சேலம், நாமக்கல், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் பங்கேற்காது – மு. வீரபாண்டியன் அறிவிப்பு

செப்டம்பர் 11: கடலூர் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 12: மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், தென் கடலோர தமிழகத்தின் ஒரு சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow Us