AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Tamil Nadu Rains: தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!!

Tamil Nadu weather today: இன்று முதல் செப்.05ம் தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு என கூறியுள்ளது.

Tamil Nadu Rains: தமிழகத்தில் இன்று 16 மாவட்டங்களில் மழை கொட்டித்தீர்க்கும்.. வானிலை மையம் கொடுத்த எச்சரிக்கை!!
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 02 Sep 2026 06:23 AM IST

சென்னை, செப்.02: தமிழகத்தில் இன்று சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 16 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே, சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் தினசரி மழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களில் மழை தொடரும் எனவும் கூறியுள்ளது.

இதையும் படிக்க : மதுரையில் மாணவி தற்கொலை விவகாரம்.. தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்.. கல்வித்துறையில் பரபரப்பு!

இன்று மழைக்கு வாய்ப்பு:

அந்தவகையில், இன்று (செப்.02) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சேலம், நாமக்கல், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும்.

வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு:

தொடர்ந்து, நாளை (செப்.03) விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், நாளை மறுநாள் (செப்.04) காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதனைத்தொடர்ந்து, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.

அதேபோல், செப்.05 மற்றும் செப்.06ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை மாற்றம்:

இன்று முதல் செப்.05ம் தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 2-4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும். கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. அதேசமயம் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2- 4 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை ஒட்டியும் இருக்கக்கூடும்.

இதையும் படிக்க : திருவாரூரில் இருந்து மதுரையை மிரள வைத்த தாய்மாமன் சீர் வரிசை! கார், நகை, ரூ. 60 லட்சம் ரொக்கம்..

சென்னையில் வானிலை நிலவரம்:

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Follow Us