ஒரு மாதம் இலவச ஆன்மீக பயணம்.. பக்தர்களே மிஸ் பண்ணாதீங்க.. வெளியான சூப்பர் அறிவிப்பு
Vaishnava Temple Spiritual Tour : வைணவ திருக்கோயில்களுக்கு அறிநிலையத்துறை சார்பில் இலவச அன்மீக பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்கு பக்தர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள பிரசித்தி வைணவ கோயில்களுக்கு புரட்டாசி மாதத்தில் ஆன்மீக பயணம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயில்கள்
சென்னை, ஆகஸ்ட் 24 : வைணவ கோயில்களுக்கு கட்டணமில்லா பயணம் செல்ல விண்ணப்பிக்கலாம் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். புரட்டாசி மாதத்தில் இந்த ஆன்மீக பயணம் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறை சார்பில் அவ்வப்போது அன்மீக பயணம் இலவசமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, விசேஷ மாதங்களில் பக்தர்களை இலவசமாக கோயில்களுக்கு அழைத்து சென்று வருகிறது. அந்த வகையில், தற்போது அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, புரட்டாசி மாதத்தில் வைணவக் கோயில்களுக்கு பக்தர்கள் இலவச ஆன்மீக பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறையின் மானிய கோரிக்கையின்போது, புரட்டாசி மாதத்தில் பிரசித்தி பெற்ற வைணவ திருக்கோயில்களுக்கு 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட பக்தர்களை ஆன்மீக பயணம் அழைத்து செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 20225ஆம் ஆண்டும் 2,000 பக்தர்களை வைணவ திருக்கோயிலுக்கு இலவச ஆன்மீக பயணம் அழைத்து செல்லப்படும் என்றும் இதற்காக ரூ.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
Also Read : நிறம் மாறும் விநாயகர்.. இந்த கோயில் தமிழ்நாட்டில் எங்கு இருக்கு தெரியுமா?
இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், தற்போது வைணவ திருக்கோயில்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொள்ள பக்தர்கள் விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், மதுரை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மண்டலங்களில் அமைந்துள்ள வைணவ கோயில்களுக்கு 2,000 பக்தர்களை அழைத்து செல்லப்பட உள்ளனர்.
நிபந்தனைகள்
நான்கு கட்டங்களாக அழைத்து செல்லப்பட உள்ளது. 2025 செப்டம்பர் 20,27ஆம் தேதிகளிலும், அக்டோபர் மாதம் 4,11ஆம் தேதிகளிலும் அந்தந்த மண்டலங்களில் இருந்து அன்மீக பயணம் தொடங்கப்பட உள்ளது. இந்த ஆன்மீகப் பயணத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்ட பக்தர்களாக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2,00,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
Also Read : ஆத்தாடி.. திருப்பதி ஏழுமலையானுக்கு 121 கிலோ தங்கம் வழங்கிய பக்தர்!
அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடம் இருந்து பெற்று இணைக்க வேண்டும். உடல் தகுதிக்கான மருத்துவ சான்றுடன், ஆதார் கார்டு நகல் இணைக்கப்பட வேண்டும். இந்த ஆன்மீக பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது இந்து சமய அறிநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை செப்டம்பர் 25 ஆம் தேதிக்குள் மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.