தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கொட்டப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
Heavy Rain Alert For Tamil Nadu | தமிழகத்தில் ஒருசில இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இந்த நிலையில், வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூன் 09 : தமிழகத்தில் (Tamil Nadu) இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலவி வந்த கடுமையான வெப்பத்திற்கு மத்தியில், பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தான் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மைய கூறியுள்ளது. இந்த நிலையில், வானிலை நிலவரம் குறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் மூன்று நாட்களுக்கு கனமழை – வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜூன் 01, 2026 அன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது. இதுவே நீலகிரி, கோயம்புத்தூர், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : என் பெயரோ – படத்தையோ பயன்படுத்த வேண்டாம்.. தனிநபர் அமைப்புகளுக்கு அண்ணாமலை அன்பு கட்டளை!
அதிகபட்ச வெப்பநிலையில் மாற்றம் குறைவு
தமிழகத்தில் வெப்பநிலையை பொருத்தவரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இன்று அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட வெப்பநிலை அதிகமாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.