‘வெறும் விளம்பரம் தான்’ மாநில கல்விக் கொள்கையை விமர்சித்த அண்ணாமலை
Annamalai On State Education Policy : தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டுள்ள நிலையில், அதுகுறித்து முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் இன்று மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்று இருப்பதாக அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

அண்ணாமலை
சென்னை, ஆகஸ்ட் 08 : மாநில கல்விக் கொள்கை (State Education Policy) வெறும் விளம்பரம் தான் என முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை (Annamalai) விமர்சித்துள்ளார். நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு என்று நான்கு ஆண்டுகளாக வெறும் விளம்பரத்திலேயே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் இன்று மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார் எனவும் அவர் விமர்சித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் மாநில கல்விக் கொள்கையை 2025 ஆகஸ்ட் 8ஆம் தேதியான இன்று வெளியிட்டார். அதில் பல்வேறு விஷயங்கள் இடம் பெற்று இருந்தன . குறிப்பாக, தமிழகத்தில் இரு மொழி கொள்கையே பின்பற்றப்படும் என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஆல்பாஸ் என்பதையும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த சூழலில், முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மாநில கல்விக் கொள்கை குறித்து விமர்சித்துள்ளார்,
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “மாநிலக் கல்விக் கொள்கை குழு அமைத்து மூன்று ஆண்டுகள் கடந்து விட்டன. இந்த வருடக் கல்வி ஆண்டும் தொடங்கி விட்டது. இன்னும் ஏழு மாதங்களில், திமுக ஆட்சியும் அகற்றப்படவிருக்கிறது. மூன்று ஆண்டுகளாக தூங்கிக் கொண்டு, தற்போது இந்தக் கல்விக் கொள்கையை வெளியிடுவோம் என்பது, வெறும் விளம்பரம் இன்றி வேறென்ன?
Also Read : கொள்கை இழந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்படி பழனிசாமி விமர்சனம்..
அண்ணாமலை விமர்சனம்
நாளொரு மேடை, பொழுதொரு நடிப்பு என்று நான்கு ஆண்டுகளாக வெறும் விளம்பரத்திலேயே ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள், மாநிலக் கல்விக் கொள்கை வெளியீடு என்ற பெயரில் இன்று மீண்டும் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்.
தேசிய அளவில் ஒருங்கிணைந்த கல்வி…
— K.Annamalai (@annamalai_k) August 8, 2025
திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில், ஹிந்தி உட்பட பல மொழிகள் கற்றுக் கொடுக்கப்படுகின்றன. ஆனால், அரசுப் பள்ளிகளில் இரண்டு மொழிகள்தான் கற்றுக் கொடுப்போம் என்று கூறுகிறார் முதலமைச்சர். பணம் இருப்பவர்கள் பல மொழிகள் கற்கலாம், ஏழை மாணவர்கள் இரண்டு மொழி தான் கற்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கொள்கை. இதில் என்ன சமத்துவம் இருக்கிறது, சமூக நீதி இருக்கிறது என்பதை, முதலமைச்சர்தான் கூற வேண்டும்” என தெரிவித்து இருந்தார்.
Also Read : வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்.. எப்போது தெரியுமா? முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
மாநில கல்விக் கொள்கை
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் மாநில கல்விக் கொள்கையை வெளியிட்டார். அதில், பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இதில், குறிப்பாக, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடப்பாண்டு முதல் ரத்து செய்யப்படுகிறது. 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுககு கட்டாய தேர்ச்சி அளிக்கப்படுகிறது. அதோடு, தமிழக்ததை இரு மொழிக் கொள்கை தான் பின்பற்றப்படும் உள்ளிட்டவை மாநில கல்விக் கொள்கையில் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.