Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

கொள்கை இழந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்படி பழனிசாமி விமர்சனம்..

Edappadi K Palanisamy Campaign: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழ்கத்தை மீட்போம் என்ற பெயரில் பிரச்சார பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், ராஜபாளையத்தில் பேசிய அவர், கம்யூனிஸ்ட் கட்சிகள் கொள்கை இழந்து உள்ளது, 50 மாதங்களில் திமுகவிற்கு எதிராக ஒரு அறிக்கை விட்டுள்ளனரா என கேள்வி எழுப்பி உள்ளார்.

கொள்கை இழந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் – அதிமுக பொதுச் செயலாளர் எடப்படி பழனிசாமி விமர்சனம்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 08 Aug 2025 07:03 AM IST

எடப்பாடி பழனிசாமி, ஆகஸ்ட் 8, 2025: 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கக் கூடிய நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் ஆளும் கட்சியான திமுக இடையே கடுமையான கருத்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட வருகிறது. அந்த வகையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ” திமுக கூட்டணி வலிமையாக இருக்கலாம் ஆனால் எங்களுக்கு மக்கள் வலிமையாக இருக்கிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி தோல்வியை நிர்ணயம் செய்வது மக்கள். அந்த மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள்” என ராஜபாளையத்தில் பிரச்சாரத்தின் போது பேசி உள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரின் கீழ் மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்தித்து பரப்புரையாற்றி வருகிறார். முதல் கட்ட பிரச்சார பயணம் என்பது ஜூலை 7 2025 அன்று தொடங்கி ஜூலை 21 2025 வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட பிரச்சார பயணம் என்பது ஜூலை 24ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

தேர்தலை சந்திக்க ஆயத்தமாகும் அதிமுக:

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக எப்படியாவது ஆட்சி அமைக்க வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு கட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டுள்ள சுற்றுப்பயணத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை குறிவைத்து கடுமையான கருத்து விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். முதல் கட்ட சுற்றுப்பயணத்தின் போதும் திமுக கூட்டணி கட்சி விமர்சித்து தனது பயணத்தை மேற்கொண்டார்.

மேலும் படிக்க: போராட்டம் தொடர்ந்தால் கைது நடவடிக்கை.. தூய்மை பணியாளர்களுக்கு காவல் துறை எச்சரிக்கை..

அதேபோல் வருகின்ற 2025 ஆகஸ்ட் 17ஆம் தேதி திருநெல்வேலியில் பாஜகவின் மாநில மாநாடு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கொள்கை இழந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் – எடப்படி பழனிசாமி:

ஆகஸ்ட் 7 2025 அன்று ராஜபாளையம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சார பயணத்தை மேற்கொண்ட அப்போது மக்களிடையே பேசிய அவர் கொள்கையை இழந்ததால் கம்யூனிஸ்டுகள் மக்களிடம் செல்வாக்கு இழந்துவிட்டனர். 50 மாதத்தில் ஒருமுறையாவது திமுகவை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிக்கை விட்டிருக்கிறதா என கேள்வி எழுப்பி இருக்கிறார். அதேபோல் ஆணவக் கொலை பற்றி பேச திமுக கூட்டணி தலைவர்கள், முதல்வரிடம் அனுமதி கேட்கிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க: திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ கொலை வழக்கு.. 2 பேருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..

மேலும், ” திமுக கூட்டணி வலிமையாக இருக்கலாம் ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது மக்கள் தான். அந்த மக்கள் எங்கள் பக்கம் இருக்கிறார்கள் ” என மக்களிடையே உரையாற்றியுள்ளார். இந்த பிரச்சார பயணம் என்பது 2025 ஆகஸ்ட் 8ஆம் தேதி முடிவடைகிறது கடைசி நாளான இன்று விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் விருதுநகர் அருப்புக்கோட்டை ஆகிய மூன்று தொகுதிகளுக்கு சென்று மக்களிடையே உரையாற்றுகிறார்.