சித்ரா பௌர்ணமி – திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு – எங்கிருந்து தெரியுமா?
வருகிற மே 1, 2026 அன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வருகை தரவுள்ளனர். சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, ஏப்ரல் 29 : சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு பக்தர்களின் வசதிக்காக திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற மே 1, 2026 அன்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து வருகை தரவுள்ளனர். இதனால் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு
சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு ஏப்ரல் 30, 2026 முதல் மே 02, 2026 வரை சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கும் மற்றும் பல்வேறு இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மே 30, 2026 அன்று நவியாழக்கிழமை இரவு 9.50 மணி முதல் மே 1. 2026 இரவு 11.07 மணி வரை சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டவுள்ளன. இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : வெப்பத்துக்கு குட்பை… தமிழகத்தில் இன்றுமுதல் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு




சென்னை கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து ஏப்ரல் 30, 2026 அன்று 548 பேருந்துகளும், மே 1, 2026 அன்று 565 பேருந்துகளும் மற்றும் மே 2, 2026 அன்று 35 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன. அதே போல சென்னை மாதவரத்திலிருந்து ஏப்ரல் 30, 2026 அன்று 186 பேருந்துகளும், மே 01, 2026 அன்று 174 பேருந்துகளும் மற்றும் சென்னை அடையாரிலிருந்து ஏப்ரல் 30, 2026 அன்று 55 பேருந்துகளும், மே 01, 2026 அன்று 50 பேருந்துகளும் தினசரி இயக்கக்கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக இயக்கப்படும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்தும் இயக்கப்படவுள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலமாக இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதனம் கொண்ட 40 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு மே 1, 2026 அன்று இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், மதுரை, சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : 106 டிகிரி ஃபாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. அசௌகரியம் ஏற்படலாம் என வானிலை மையம் எச்சரிக்கை..
மேலும், முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.