AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நடுநிலைமையை எனது தீர்ப்பு சொல்லும்.. அதிமுக விவகாரத்தில் அதிரடி காட்டிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!

Speaker JCD Prabhakar : அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரத்தில் நான் நடுநிலையுடன் செயல்படுகிறேனே என்பது நான் அளிக்கப்போகும் தீர்ப்பில் தெரியும் என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தெரிவித்தார். அதிமுகவினர் அளித்த மனுக்கள் ஆய்வில் இருப்பதாகவும் சட்டமன்ற கூட்டத்தொடரின் போது தீர்ப்பு வழங்கப்படும் என்றார்.

நடுநிலைமையை எனது தீர்ப்பு சொல்லும்.. அதிமுக விவகாரத்தில் அதிரடி காட்டிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்!
சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 24 May 2026 12:16 PM IST

தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் சட்டமன்ற குழு தலைவர் பதவி விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ். பி. வேலுமணி இடையே மோதல் போக்கு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அத்துடன், இரு தரப்பை சேர்ந்தவர்களும் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக இரு தரப்பினரும் தனித்தனியாக சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இதில், அவர் நடுநிலையாக செயல்படவில்லை என்று குற்றச்சாட்டு முன் வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சென்னை எழும்பூரில் சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது: அதிமுக எம்எல்ஏக்கள் விவகாரத்தில் நான் நடுநிலையில் இருந்து பணியாற்றுகிறேனா இல்லையா என்பது நான் தீர்ப்பு வழங்கும்போது தெரியும்.

எனது தீர்ப்பை பார்த்து நாடே தெரிந்து கொள்ளும்

நான் வழங்கும் தீர்ப்பை பார்த்து எந்த நிலையில் பணிபுரிகிறேன் என்பது இந்த நாடே தெரிந்து கொள்ள போகிறது. என் மீது குற்றச்சாட்டு வைப்பவர்களும் தெரிந்து கொள்வார்கள். அதிமுகவில் இரு வேறு குழுக்களாக பிரிந்துள்ள அந்த கட்சியின் இரு தூண்கள் ஆக இருப்பவர்கள் தனித்தனியாக மனு அளித்துள்ளனர். இந்த மனுக்கள் ஆய்வில் இருந்து வருகிறது. இந்த ஆய்வு முடிந்து உரிய நேரத்தில் உரிய முடிவு எடுத்து சட்டப்பேரவையில் அறிவிப்பேன். அப்போது, நான் எப்படி நியாயமாக நடந்து கொண்டேன் என்பதை நாடும், நாட்டு மக்களும் அறிந்து கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: மீண்டும் எகிறியது சுங்க கட்டணம்.. அதிர்ச்சியில் தமிழக வாகன ஓட்டிகள்.. எவ்வளவு உயர்வு தெரியுமா?

சட்டமன்ற குழு தலைவர் பதவி தொடர்பாக மோதல்

அதிமுகவில் எஸ். பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தரப்பு தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. ஆனால், எடப்பாடி பழனிசாமி தரப்பு அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தது. மேலும், சட்டமன்ற குழு தலைவர் பதவி தொடர்பாகவும் இரு தரப்பினரிடையே கடுமையான மோதல் போக்கு உருவானது. இதில், கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ். பி. வேலுமணி மற்றும் எடப்பாடி தரப்பு தனித்தனியாக புகார் அளித்துள்ளது.

சட்டமன்ற கூட்டத்தொடரில் நடவடிக்கை

இந்த புகாரில் தான் சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர் நடுநிலையுடன் செயல்படவில்லை என்று குற்றம் சுமத்தியதாக புகார் அளித்துள்ளது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் தான், சபாநாயகர் மேற்கண்ட கருத்தை தெரிவித்துள்ளார். அதிமுகவினர் அளித்துள்ள புகார் மனுக்கள் மீது சட்டப்பேரவை கூட்டத்துடன் போது சபாநாயகர் நடவடிக்கை எடுப்பார் என்று தெரிகிறது.

மேலும் படிக்க: காவல் நிலையத்தில் காமுகத்தனம்.. புகாரளிக்க வந்த பெண்ணுக்கு ஆபாச எஸ்எம்எஸ்.. எஸ்.ஐ-க்கு அதிரடி ஆப்பு!

Follow Us