AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மதுரை முருக பக்தர்கள் மாநாடு.. 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்.. என்னென்ன?

Murugan Maanadu Madurai : மதுரையில் இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு பிரம்மாண்டமாக 2025 ஜூன் 22ஆம் தேதியான இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அறநிலையத்துறை வசமுள்ள கோயில்களை சுதந்திரமான அமைப்பிடம் ஒப்படைக்க உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மதுரை முருக பக்தர்கள் மாநாடு..  6 தீர்மானங்கள் நிறைவேற்றம்.. என்னென்ன?
முருகன் மாநாடுImage Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 22 Jun 2025 23:02 PM IST

மதுரை, ஜூன் 22 :  மதுரை மாவட்டத்தில் நடந்த முருக பக்தர்கள் (Murugan Maanadu Madurai) மாநாட்டில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது, அறநிலையத்துறை வசமுள்ள கோயில்களை சுதந்திரமான அமைப்பிடம் ஒப்படைக்க உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மதுரை வண்டியூர் டோல்கேட் அருகே உள்ள அம்மா திடலில் முருக பக்தர்கள் மாநாடு இந்து முன்னணி அமைப்பு சார்பில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும், இந்த முருகன் மாநாட்டில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாநாட்டின் முக்கிய நிகழ்வான பக்தக்ரள் என அனைவரும் ஒரே நேரத்தில் கந்தசஷ்டி கவசத்தை பாடினர். திரையை பார்த்து பக்தர்கள் ஒன்றாக சேர்ந்து கந்த சஷ்டி கவசம் பாடினர்.

முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

அதைத் தொடர்ந்து, முருகன் மாநாட்டில் ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதன்படி, திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருப்பரங்குன்றம் மலை குமரனுக்கே சொந்தம் என்று திர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், தமிழகத்தில் அறநிலையத்துறை வசமுள்ள கோயில்களை சுதந்திரமான அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும். அறநிலையத்துறையை வெளியேற்ற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வரும் தேர்தலில் ஒன்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் சஷ்டியின் போது வீட்டில் ஒன்றாக சேர்ந்து சஷ்டி கவசம் பாட வேண்டும் என 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

பவன் கல்வாய் உள்ளிட்டோர் பேச்சு


முருகன் மாநாடு குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், “இது மிகவும் நன்றாக இருந்தது – எதிர்பாராதது. இது ஒரு அரசியல் கட்சி கூட்டம் அல்ல. கடவுள் நம்பிக்கை கொண்ட மக்களின் கூட்டம். கந்த சஷ்டி கவசம் பாடுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்” என்று கூறினார்.

தொடர்ந்து, பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “நாங்கள் புதிய உற்சாகத்துடன் வந்துள்ளோம். அதே உற்சாகத்துடன் எங்கள் பயணத்தைத் தொடர்வோம். கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதும், இந்து கலாச்சாரத்தை அவமதிப்பதும் ஒரு பொதுவான நடைமுறையாகிவிட்டது.

இந்துக்கள் பற்றி என்ன சொன்னாலும் யாரும் கவலைப்படாத ஒரு காலம் இருந்தது. ஆனால் இன்று, நாங்கள் எங்கள் பலத்தைக் காட்டி, இந்துக்களை ஒதுக்கி வைக்கவோ அவமதிக்கவோ முடியாது என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.

Follow Us