AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

2026 தேர்தலுக்காக முருகன் மாநாடா? உண்மையை உடைத்த அண்ணாமலை!

Murugan Maanadu Madurai : மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசினார். அப்போது, இந்த மாநாட்டிற்கும் தேர்தலுக்கும் சம்மதம் இல்லை என்றும் இந்த மாநாடு அரசியலுக்காக கிடையாது என்றும் அண்ணாமலை விளக்கம் அளித்தார்.

2026 தேர்தலுக்காக முருகன் மாநாடா? உண்மையை உடைத்த அண்ணாமலை!
அண்ணாமலை
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 22 Jun 2025 21:38 PM IST

மதுரை, ஜூன் 22 :  மதுரை மாவட்டத்தில் 2025 ஜூன் 22ஆம் தேதியான இன்று முருக பக்தர்கள் மாநாடு (Murugan Maanadu) நடைபெற்றது. இந்த மாநாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை (Annamalai), முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, இந்த மாநாட்டில் அண்ணாமலை பேசினார். தங்களுடைய உரிமையை நிலைநாட்ட இங்கு பெரிய கூட்டம் கூடியிருக்கிறது. சனாதன தர்மத்துக்கு பிரச்னை ஏற்பட்டால் அங்கே நான் இருப்பேன். இந்த முருக பக்தர்கள் மாநாட்டை 2026 தேர்தலுக்காக என்கிறார்கள். இந்த மாநாட்டிற்கும் தேர்தலுக்கும் சம்மதம் இல்லை. மக்களுக்கு நிதி வேண்டாம். சாமி வேண்டும் என்று முடிவு செய்து விட்டார்கள். ஆனால், யார் சாமி, நிதி யாருக்கு என்று மக்கள் முடிவு செய்து விட்டார்கள். எனவே, இந்த மாநாடு அரசியலுக்காக கிடையாது. இந்த கூட்டத்தில் ஒன்றாக சேர்ந்து இருப்பது நமது வாழ்வியல் முறையை மீட்டெடுப்பதற்காக மட்டுமே. கேள்வி எழுப்புவதற்காக.

2026 தேர்தலுக்காக முருகன் மாநாடா?

முருகன் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட ஒவ்வொரு தீர்மானமும் நமது வாழ்வியல் முறையை தட்டி எழுப்புவதற்காக தான். நாம் இன்றில் இருந்து கேள்வி கேட்க வேண்டும். பிரச்னை என்றால் தட்டிக் கேட்க வேண்டும்.   நமது வருங்காள சங்கதிகளுக்கு வாழ்வியல் முறையை ஏற்படுத்தி தர வேண்டும்.

தமிழ்நாட்டில் கோயிலுக்கு சென்றால், 50, 100 ரூபாய் பணம் வாங்குகிறார். இந்த மாநாடு ஆன்மீக மாநாடு. அரசியலுக்கு இந்த மாநாட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழ்நாட்டில் இந்து மகக்ள், இந்து மத அல்லாத மக்களுக்கு ஒரு சட்டம் என இரண்டு சட்டங்கள் உள்ளது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “இது தவறு. இந்த மாநாடு முடிந்து செல்லும் போது வீரபாகுவாக செல்ல வேண்டும். தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலமும், ஆன்மீகமும் பிறந்துள்ளது என்பது மறுக்க முடியாது. நமது பண்டைய கால கலாச்சார, பழக்கவழக்கங்கள் போன்ற மறைந்த நமது வரலாற்றை கண்டுபிடிக்க வேண்டும்.

உண்மையை உடைத்த அண்ணாமலை

நமக்கு பிரச்சினை வரும் போதெல்லாம் இது போன்ற மாநாடு நடக்கும். திருமாவளவன் நெற்றில் வைத்த திருநீறை அழித்து போட்டோவுக்கு போஸ்கொடுத்தது கண்டிக்க தக்கது. இவர்கள் வரும் 2026 ஆம் ஆண்டு நம்மிடையே ஓட்டு பிச்சை கேட்க வருவார்கள்.

அப்போது நாம் யார் என்று காட்ட வேண்டும். 5400 ஆண்டுகளுக்கு மேல் நமது கலாச்சார பழமையானது. ஆன்மீக சார்ந்த அரசியல், ஆன்மீக சார்ந்த பொருளாதாரம் வரும் போது தான் நமக்கு வளர்ச்சி கிடைக்கும்” என்று தெரிவித்தார். முன்னதாக, ஆந்திர முதல்வர் பவன் கல்யாண் மற்றும்  பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow Us