AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

“நடிப்புல சரோஜா தேவியவே மிஞ்சிட்டாங்க!”.. சத்யபாமாவை கலாய்த்து தள்ளிய சீமான்!

Seeman Mocked Sathyabama: தாராபுரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், "சத்யபாமாவுல சத்யம் இல்லை, பாமா தான் இருக்கு" என்றும், அவரது நடிப்பைப் பார்க்கும்போது மூத்த நடிகை சரோஜாதேவியையே மிஞ்சிவிட்டார் என்றும் கடுமையாகக் கேலி செய்து கலாய்த்துள்ளார். சீமானின் இந்த அதிரடி பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

“நடிப்புல சரோஜா தேவியவே மிஞ்சிட்டாங்க!”.. சத்யபாமாவை கலாய்த்து தள்ளிய சீமான்!
சீமான்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 03 Oct 2026 09:14 AM IST

திருப்பூர், அக்.03: தமிழகத்தில் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் சூழலில், அரசியல் தலைவர்களின் பிரசார உரைகளும், மேடைப் பேச்சுகளும் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வருகின்றன. குறிப்பாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது தனித்துவமான பேச்சு நடை மற்றும் நகைச்சுவை கலந்த விமர்சனங்கள் மூலம் மேடைகளில் அரசியல் எதிரிகளைத் தாக்கிப் பேசுவது வழக்கம். அந்த வகையில், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய சீமான், வழக்கமான பாணியில் எதிர்த்தரப்பினரை கடுமையாக விமர்சித்துப் பேசினார். அப்பேச்சில், “சத்யபாமா” குறித்து அவர் உதிர்த்த கருத்துகளும், அவரை பழம்பெரும் நடிகை சரோஜாதேவியுடன் ஒப்பிட்டுப் பேசிய விதமும் தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பையும் சிரிப்பலைகளையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க: மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்… சத்யபாமா குறித்து திமுக தலவைரின் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு

“சத்யபாமாவுல சத்யம் இல்லை”:

பிரச்சாரக் கூட்டத்தில் திரளான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றிய சீமான், எதிர்த்தரப்பு நிர்வாகியான சத்யபாமா என்பவரை இலக்கு வைத்துப் பேசத் தொடங்கினார். “சத்யபாமா என்ற பெயரில் சத்யம் (உண்மை) எதுவும் இல்லை, வெறும் பாமா மட்டும்தான் இருக்கிறது” என்று தனது பாணியில் கிண்டலடித்தார். மேடைகளில் அவர்கள் வெளிப்படுத்தும் பொய்களையும், நாடகத்தனமான நடத்தைகளையும் சுட்டிக்காட்டிய அவர், மக்கள் முன் உண்மைக்கு மாறாக நடிக்க முயலும் அரசியல்வாதிகளை பொதுமக்கள் ஒருபோதும் நம்ப மாட்டார்கள் என்பதைத் தனது பேச்சின் மூலம் வெளிப்படுத்தினார்.

சரோஜா தேவியையே மிஞ்சிய நடிப்பு:

தொடர்ந்து பேசிய சீமான், சத்யபாமாவின் அரசியல் செயல்பாடுகளையும் மேடைப் பேச்சுகளையும் திரைப்பட நடிகர்களின் நடிப்போடு ஒப்பிட்டுப் பேசினார். “அவர் ஆற்றும் உரையையும் பாவனைகளையும் பார்க்கும்போது, தமிழ் சினிமாவின் மூத்த பழம்பெரும் நடிகையான சரோஜாதேவியையே நடிப்பில் மிஞ்சிவிட்டார் போல் தோன்றுகிறது” எனக் கூறி அதிரடியாகக் கலாய்த்தார். சீமானின் இந்த நகைச்சுவையான ஒப்பிடும் பேச்சு கூட்டத்தில் இருந்த தொண்டர்களிடையே பெரும் பலத்த சிரிப்பையும் கையத்தட்டல்களையும் உருவாக்கியது.

இதையும் படிக்க : வாக்காளர்களுக்கு தங்க நாணயமா? ரூ.3.5 கோடி மதிப்பிலான 2.5 கிலோ தங்கம் பறிமுதல்.. இடைத்தேர்தல் தொகுதியில் பரபரப்பு!

தேர்தல் களத்தில் அதிகரிக்கும் சொற்போர்கள்:

மேலும், குறுகிய நேர உரையாடல்களில் நூற்றுக்கணக்கான முறை எதிர்க்கட்சிகளின் பெயரைக் குறிப்பிட்டுப் பேசுவதையும், தேர்தல் களத்தில் தங்களுக்குள் மட்டுமே போட்டி இருப்பது போலக் காட்டிக்கொள்ளும் போக்கையும் சீமான் கடுமையாகச் சாடினார். தேர்தல் நெருங்கும் இந்த வேளையில், நாம் தமிழர் கட்சி களத்தில் தனித்து நின்று மக்களின் உண்மையான தேவைகளுக்காகப் போராடுவதாகவும், மற்ற கட்சிகளின் இந்த நாடக அரசியல் மக்களிடம் செல்லுபடியாகாது என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார். மாற்று அரசியல் பேசுவதாகக் கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றும் பிற கட்சிகளின் பொய் வாக்குறுதிகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட சீமான், மண்ணையும் மக்களையும் காக்கும் கொள்கைகளுக்கே ஆதரவளிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

Follow Us