காதலர் தினத்துக்கு இப்படியொரு அறிவிப்பா…மதுக்கடையை முற்றுகையிட்ட கூட்டம்…இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Puducherry Liquior Shop: காதலர் தினத்தையொட்டி, புதுச்சேரி மாநிலத்தில் செயல்பட்டு வரும் மதுக்கடையில் வித்தியாசமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இது குறித்த தகவல் கலால் துறைக்கு சென்ற நிலையில், அந்த துறை அதிகாரிகள் களத்தில் இறங்கியதால் இறுதியில் சீன் மாறி மாறி போனது.

புதுச்சேரி மதுக்கடையில் காதலர் தின அறிவிப்பு
உலகம் முழுவதும் நாளை மறுநாள் காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளதால் ஏராளமான கடைகளில் காதலர்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, புதுச்சேரியில் உள்ள உணவகங்கள், பரிசு கடைகள், கபேக்கள், லே கபே ஆகியற்றில் சிறப்பு அறிவிப்புகள் மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன. வரும் காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக ஏராளமான காதலர்கள் புதுச்சேரிக்கு படையெடுப்பார்கள். பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் அதிக அளவு சுற்றுலா பயணிகள் கூட்டம் புதுச்சேரியில் காணப்படும். தற்போது, வார இறுதி நாளுடன் சேர்ந்து, காதலர் தினமும் வருவதால் புதுச்சேரியில் காதலர் தினத்தை கொண்டாடுவதற்கு ஏராளமான காதலர்கள் திட்டமிட்டுள்ளனர். இதற்காக, புதுச்சேரியில் உள்ள உணவகங்கள், கபேக்கள், லே கபே உள்ளிட்டவற்றில் தள்ளுபடி அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முழு ஒயின் வாங்கினால் 4 டின் பீர் இலவசம்
அதன்படி, புதுச்சேரியில் உள்ள மது கடையில் வித்தியாசமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. இதில், காதலர் தினத்தையொட்டி, புதுச்சேரியில் முழு ஒயின் பாட்டில் வாங்கினால், 4 டின் பீர் இலவசம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட கடையின் முன்பு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் அதிக அளவு பகிரப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த கடைக்கு செல்ல வேண்டும் என்று திட்டு அந்த கடை முன் குவிந்தனர். இந்த நிலையில், இது தொடர்பான தகவல் கலால் துறையின் காதுகளுக்கு சென்றது. உடனே, ஹலால் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர்.
மேலும் படிக்க: அசைவ பிரியர்களுக்கு இன்ப அதிர்ச்சி..திடீரென குறைந்த கோழி இறைச்சி விலை..பின்னால் இருக்கும் அதிர்ச்சி காரணம்!
மதுக்கடைக்கு கலால் துறை எச்சரிக்கை
அப்போது, அந்த மதுக்கடையில் ஒயின் பாட்டிலுக்கு, 4 டின் பீர்கள் இலவசமாக வழங்கப்பட இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, காதலர் தினத்தையொட்டி, சலுகை விலையில் மது விற்பனை செய்யக்கூடாது எனவும், இது கலால் விதிகளுக்கு அப்பாற்பட்டது என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, அந்த அதிரடி சலுகையை கடையின் உரிமையாளர் நிறுத்தினர். புதுச்சேரி மாநிலம் சுற்றுலாவுக்கு எப்படி சிறந்ததாக உள்ளதோ, அதே போல மதுவுக்கும் பெயர்போன மாநிலமாக புதுச்சேரி இருந்து வருகிறது.
மதுவுக்கும் பெயர்போன புதுச்சேரி மாநிலம்
இதனால், அண்டை மாநிலமான தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தங்களது பைக் மற்றும் கார்களில் புதுச்சேரி நோக்கி படை எடுத்து வருகின்றனர். இவர்கள் பண்டிகை நாள்கள் மற்றும் விடுமுறை நாள்களில் அதிகளவு புதுச்சேரியில் சுற்றி வருவர். தற்போது, காதலர் தினம் வருவதால் சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுச்சேரியில் குவிந்துள்ளனர்.
மேலும் படிக்க: காதலர் தினம்…22 வகையான ரோஜா பூக்கள் சாகுபடி..ஆன்லைனில் ரோஜா பூக்கள் விற்பனை படு ஜோர்!