AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சட்டமன்ற தேர்தல்… புதுச்சேரியில் தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை

Puducherry School Holidays : புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், தேர்தல் பணிகள் காரணமாக அம்மாநிலத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஏப்ரல் 7 முதல் 10 வரை 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

சட்டமன்ற தேர்தல்…  புதுச்சேரியில் தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 01 Apr 2026 19:52 PM IST

புதுச்சேரி, ஏப்ரல் 1 : புதுச்சேரியில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பள்ளிகளுக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை புதுச்சேரி பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் ஏப்ரல், 2026 மாதத்தில் நடைபெறவுள்ளன. இதில், 30 தொகுதிகள் கொண்ட புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9, 2026 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

புதுச்சேரியில் தொடர்ந்து 4 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை

இந்த நிலையில் தேர்தல் பணிகளுக்காக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளில் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வாக்கு பதிவுகள் பெரும்பாலும் அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில் நடைபெறவிருக்கின்றன. மேலும் தேர்தல் பணிகளுக்கு ஆசிரியர்கள் பயன்படுத்தப்படவிருக்கின்றனர். இதனையடுத்து தேர்தல் பணிகள் எந்த சிக்கலும் இல்லாமல் நடைபெறுவதை கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : 252 முறை தோல்வி.. 253- ஆவது முறையாக வேட்புமனு தாக்கல்.. யார் இந்த தேர்தல் மன்னன்!

அதன் படி புதுச்சேரியில் வருகிற ஏப்ரல் 9, 2026 அன்று சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதனையடுத்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பள்ளிகளில் பாதுகாக்கப்படும் என்பதால் ஏப்ரல் 7, 8, 9, 10, 2026 ஆகிய 4 நாட்களுக்கு பள்ளிகள் விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில் தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.  வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க டிரோன்கள் உதவியுடன் தீவிர கண்காணிப்பில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருகிறது.

பிரதமர் மோடி புதுச்சேரி வருகை

இதற்கிடையில், அரசியல் கட்சிகள் மாநிலம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தேசிய தலைவர்கள்,புதுச்சேரிக்கு வந்த வண்ணம் இருக்கின்றனர். அதன் ஒரு பகுதியாக ஏப்ரல் 3, மற்றும் 4, 2026 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ளவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : முதல்வர் ஸ்டாலின் பிரசார வாகனத்தை மறித்து பறக்கும் படையினர் அதிரடி சோதனை..

இதனையடுத்து பிரதமர் மோடி ஏப்ரல் 3, 2026 அன்று தனி விமானம் மூலம் சென்னை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்லவிருக்கிறார். அங்கு பாஜக கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறவிருக்கும் ரோடு ஷோவில் அவர் கலந்துகொள்வார் என்று கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அன்றிரவே சென்னை திரும்பும் அவர், ஏப்ரல் 4, 2026 அன்று காலை 11 மணியளவில் பாஜக தண்டர்களுடன் பிரதமர் கலந்துரையாடவிருக்கிறார்.

Follow Us