AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Weather Alert: எச்சரிக்கை! சென்னையை சூழும் கடும் வெப்ப அலை

Chennai Braces for 6–8 Days of Heat Wave: சென்னையில் 6–8 நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2026 ஏப்ரல்–ஜூன் வரை வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும். அதிகபட்ச வெப்பநிலை 40°C-ஐ எட்டும் வாய்ப்பு உள்ளது. வடக்கு மற்றும் கடற்கரை மாவட்டங்களில் வெப்ப அலை அதிகம்.

Weather Alert: எச்சரிக்கை! சென்னையை சூழும் கடும் வெப்ப அலை
மாதிரி புகைப்படம் Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 01 Apr 2026 15:09 PM IST

சென்னையில் 6–8 நாட்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் வரை வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 40°C வரை வெப்பநிலை உயரக்கூடும் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியமாகியுள்ளது. குறிப்பாக வடக்கு மற்றும் கடற்கரை மாவட்டங்களில் வெப்ப அலை தாக்கம் அதிகமாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் சில இடங்களில் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதால், வெப்பம் தற்காலிகமாக குறையலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரங்கள் நடைபெறும் இந்த காலத்தில் கடும் வெப்பம் அரசியல் கட்சிகளுக்கும் மக்களுக்கும் சவாலாக அமையும். எனவே, மக்கள் அடிக்கடி தண்ணீர் குடித்து நீர்ச்சத்தை பராமரித்து, வெய்யிலில் அதிக நேரம் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை: வெப்ப அலை எச்சரிக்கை வெளியீடு

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அடுத்த 6 முதல் 8 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் நிலவக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த அதிகரிக்கும் வெப்பநிலை பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் அபாயம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் காலநிலை நிலைமை

வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புகளின்படி, தமிழகத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் இயல்பை விட அதிகமாக இருக்கும். குறிப்பாக வடக்கு மற்றும் கடற்கரை மாவட்டங்களில் வெப்ப அலைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. ஏப்ரல் மாதத்தில் சராசரி பகல் வெப்பநிலை 34.7°C ஆக இருக்கும் என்றும், அதிகபட்சம் 37.3°C வரை செல்லக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை 40°C-ஐ எட்டும் போது அது வெப்ப அலை என அழைக்கப்படும்.

இடைக்கால மழை மற்றும் தற்காலிக நிவாரணம்

இந்நிலையில், இடையே சில பகுதிகளில் ஓரிரு மழை பெய்யும் வாய்ப்பும் இருப்பதாகவும், அதனால் வெப்பநிலை தற்காலிகமாக குறையக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆனால், மொத்தத்தில் கோடைக்காலத்தின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Also Read: பங்குனி பௌர்ணமியில் திருவண்ணாமலை கிரிவலம்…. எப்போது செல்லலாம்…?

தேர்தல் சூழலில் வெப்பம் தாக்கம்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்குப்பதிவை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் தேர்தல் பிரசாரங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் அதிக வெப்பம் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்களுக்கு சவாலாக அமையக்கூடும்.

பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்

வானிலை ஆய்வு மையம் மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது. அதிக நேரம் வெய்யிலில் இருக்காமல் தவிர்க்கவும், அடிக்கடி தண்ணீர் குடித்து உடல் நீர்ச்சத்தை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மற்றும் உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Follow Us